07 October 2015

வீட்டில் விசேஷங்கள் வாங்க விழாவுக்கு!!!

அவசர உலகில் வலையில் வந்து போகும் பலரில் !அவர் யார் ??அவரின் குணம் என்ன?, அவரின் தகுதி என்ன?, என்பதை நேரில் அறியாது !ஐயா, அண்ணா, அண்ணாச்சி, அக்கா. அக்காச்சி, சகோ, சகோதரி என்று மட்டும்மல்ல மாமா, மச்சான், மாப்பிள்ளை, என்று உறவு முறை கொண்டாடும் ஒரு புதிய உலகை இந்த பதிவுலகம் தந்து இருக்கின்றது எனக்கு!


ஏதிலி என்று என் முகப்புரை தோற்ற இடம் இந்த வலையுலகு !இங்கு தனிமரம் என்னையும் தோப்பாக்கிய உறவுகள் பலர். அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் .சற்று தனிமையில் பேச வேண்டும் என்ற முகம் காண  ஆசையில் இன்றும் இருக்கின்றேன் !!!

ஆனால் காலம் புலம்பெயர் தூரத்தில் உடல்! இருந்தாலும் உள்ளம் புதுக்கோட்டை விழாவை சுற்றியே வட்டம் இடுகின்றது !


 தனிப்பட்ட  பொருளாதார தேடல், ஓடல், என்பது கடந்து கொஞ்சம் முகநூல் சுவாசிப்பு என போட்டியில் முழுமையாக பங்கு கொள்ளமுடியாத சோம்பல் .எழுத்துப்பிழை குற்ற உணர்வு என என்னை தனிமைப்படுத்தினாலும்!

 புதுக்கோட்டை விழா அமைப்புக்கு குழுவின் செயல்பாட்டுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துப் பூக்களை  தனிமரம் வலையில் அள்ளி வீசுகின்றேன்!


 இந்த விழா பிரமாண்டமான பாகுபலி போல வெற்றி கண்டுகொண்டே இருக்கின்றது என்றால் மிகையில்லை! இந்த வலையில் புதுக்கோட்டைக்கு போக சாத்தியம் இருக்கும் வலையுறவுகள்  எல்லோரும் சோம்பல். தயக்கம்.ஈகோ  போலி வரட்டுக்கவுரவம் . விட்டு தயவு செய்து நம்விழாவை சிறப்பித்து//

 நாம் தமிழர் வலையுலகில் நமக்கு என்று ஒரு அடையாளம் இருக்கு. வலையில் என்ற முத்திரையை பதிப்போம்! புதுக்கோட்டை விழா இதோ இன்னும் என்ன தோழா , கிழக்கே பார்த்தேன் அன்புத்தோழி இப்படியே கவிதை .]கதை. தொடர்கதை. அங்கே என்ன சமையல் என்று எல்லாம் பேசலாம் !

அடுத்த ஆன்மீகம் எந்த இடம் நோக்கி ஐயா?, என்று அன்புடன் அக்கரையில் எந்த நாடு பார்த்து பார்த்தாலே பரவசம் என்று பாடப்போறீங்க?,

 நீங்க யூத் என்று ஜொல்லுவிடவா ?,,

அடுத்த நூல் வெளியீடு இதுவா; ஆமா  நீங்களும் நடிக்கலாமே?, நானே இயக்க நீங்க கால்ஷீட் தர முடியுமா?, ஆமா உங்க கதை விகடன் முதல் மலேசியா  நாளிதழ் எல்லாம் அலங்கரிப்பது அறிவேன் !

ஆனால் உங்க வலையில் பின்னூட்டம் இட ஒரு தயக்கம் !ஆனாலும் நானும் ஒரு வலைப்பதிவாளர் என்ற அறிமுக மேடைக்கு நாம் எல்லாம் சேர்ந்தே செல்வோம் வட்டம் மாவட்டம் கடந்து தேசிய பதிவுலக மேடையில் சங்கமிப்போம் அரசியல் தாண்டி இலக்கிய மேடையில் ஒன்றாய்.

புதுக்கோட்டை சென்று வாருங்கள் வலையுறவுகளே!  பதிவர் விழா சந்திப்பும் சிந்திப்பும் என்பதை தொடர் ]போல உங்களின் வலைகளில் வாசிக்க காத்து இருக்கும் சாமானிய வாசகன் புலம் பெயர் ஏதிலி தனிமரம்!நம்ம வீடுதாங்க அடியெடுத்து வாங்க!
அப்பாத்தா  தனிமரம் வெட்டிப்பயல் என்று  திட்டும்[[
நானும் பாடல் போட்டு

புதுக்கோட்டை விழாவை
புலம்பெயர் தேசத்தில் இருந்து
புதுமை படைத்திட வாழ்த்துக்கின்றேன்!
புதுமை அது இனிமை
புதுக்கோட்டை  புதிய காவியம்!புதிய நாள் வரும் ஞாயிறு!11/10/15
புதியவர்கள் பாட்டு எங்கள் வீட்டில்!
புதுமைதான்!
     


.

9 comments :

S.P. Senthil Kumar said...

அருமையான அழைப்பு நண்பரே!
த ம 2

கரந்தை ஜெயக்குமார் said...

அழைத்த விதம் அருமை நண்பரே
நன்றி
தம +1

Ramani S said...

கிளம்பிக் கொண்டிருக்கிறோம்
அருமையான அழைப்புக்கு வாழ்த்துக்கள்

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

அழைப்பு அருமை...

நன்றி...

நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! வித்தியாசமான அழைப்பு! நான் எப்பவோ ரெடியாயிட்டேன்! வாழ்த்துகள்!

இளமதி said...

ஆத்மார்த்தமான, அழகான, உரிமையான விழா அழைப்பு நேசன்!

நானும் உங்களைப் போலவே இங்கிருந்து வாழ்த்தும் நிலை!

ஏனையவர் தளங்களில் வந்து கருத்திட ஏன் என்னதடை..?
வாருங்கள்! எல்லோரும் பதிவர் இனம்!. எம் மொழி அன்பெனும் தமிழ்மொழி!
வாழ்த்துக்கள்!

த ம 5

Thulasidharan V Thillaiakathu said...

நெருங்கிய சொந்தம் அழைப்பது போல் நெருக்கமான ஒரு அழைப்பு அன்புடன்! அருமை தனிமரம்!!!! நீங்கள் இல்லாததுதான் குறை....சந்திக்கும் நாள் வராமலா போய்விடும்?!!!

‘தளிர்’ சுரேஷ் said...

நல்லதொரு அழைப்பு! விழா சிறக்க வாழ்த்துக்கள்!

mageswari balachandran said...

ஆம் தாங்கள் சொன்ன அனைத்தும் அருமை,
வாழ்த்துக்கள். நன்றி.