24 February 2016

யா-சி-க்-கு-ம் ஏதிலி-!! அறிமுகம். நலமா உறவுகளே??, மீண்டும் தனிமரம் இணையத்தின் துணைகொண்டு வலை இதயங்கள் உங்களுடன் கதை பேசும் ஆசையில் புதிய தொடருடன் வருகின்றேன்..

முன்னர் போல இப்போது ஓய்வு கிடைப்பது அருதாகிவிட்டதால் என் இருப்புக்கூட மந்தகதியில் வலைப்பக்கம் வருவது. என்றாலும் உங்களின் ஆசியும் தொடர் ஆதரவும் இந்த தனிமரத்தையும் தொடர்கதையில் சிலிர்க்க வைக்கும்.என்ற நம்பிக்கை என்றும் உண்டு.

காதல் பற்றி  தொடராக எழுதுவதும் , உருகுவதும் ,கண்பார்த்தவையும் ,காதில் விழுந்த வார்த்தைகள் கவிதையாகவும் ,காலநதியில் ஓவியம் போல சேமிப்பாக தனிமரம் வலையில் இதுவரை பல நிஜத்தை எழுதிய அனுபவத்தின் ஊடே மொக்கையாக  வலம்வந்து பின் மின்நூல்வரை சில தொடர்கள் பதிந்தாலும்)))
முதல் முறையாக கற்பனையாக ஒரு குறுந்தொடர் எழுதும் எண்ணத்தின் வண்ணம் இந்த தொடர் !

இதில் வரும் விடயம் யார் மனங்களையும் வார்த்தை அம்புகொண்டு கீறும் வலிகள் அல்ல .எனக்கு தோன்றியதை என் கண்கள் ஊடே பார்த்த ரசித்த  நட்பு வட்டத்தின் நகலாக  எழுத்தாணி பிடிக்கின்றேன் ஆசையில் ஓர் கடிதம் போல [[[.

 என் ஆசைக்கு எழுத்துப்பிழை ,காட்சிப்பிழை ,கருத்துப்பிழை ,சுருங்கச்சொல்லத்தெரியாமை என்று தடைகள் பல குறுக்கே வந்தாலும் அதைத்திருத்தி  தனிமரம் வலையையும் தேர்தல் முடிந்ததும் நேரில்  வந்து பார்க்காத சட்டமன்ற உறுப்பினர் போல நினைக்காமல்)))

உங்களில் ஒருவனாக அனுதினம் வரும் ஒரு தபால்க்காரன் போல நினைக்கலாம்)))


இதுவரை திரட்டியில் வாக்கும், தித்திப்பு பின்னூட்டங்களும் வழங்கியது போல இந்தத்தொடருக்கும் உங்கள்  ஓட்டும் ,பின்னூட்டங்களும்  தொடரும் என்ற  நம்பிக்கையில் அடுத்த பகிர்வாக யாசிக்கும் ஏதிலியை வலையில் ஏற்றிவரக் காத்திருக்கின்றேன்))) இனிய பாடல்கள் ,கவிதைகள்.கலந்து அரசியல், ஆன்மீகம், சினிமா, என்று ஒரு மொக்கையாக  மீண்டும் வலம்வரப்போறன்[[[


வழமை போல இந்தத்தொடருக்கும்  தனிமரம் நேசனுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை நெஞ்சத்தைத் கிள்ளாமல், சினேஹாமீது ஆணைக்கினங்க )))

தெய்வ வாக்கு போல ஆன்றோர் சபையில்கூறிக்கொள்கின்றேன் !ஐயா தனிமரம் படிக்காத ஏதிலி!! என்னிடம் இருப்பது எல்லாம் கற்பனையும், அனுபவம் அன்றிவேறில்லை சுவிஸ்வங்கியில் சேமிப்பாக கறுப்பு பணம்))))

தொடர் இனி நாடிவரும் இனிய பாடல்கள் வலம் சூழ !தேர்தல் வாக்கு கேட்டு வரும் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் படைகள் போல [[[[


 பின்னூட்டம் இடலாம் விரும்பினால் !


அதுக்கு முன் ஒரு வார்த்தை!

.
தனிமரம் யாரையும் என் வலைக்கு  வா என்று கெஞ்சல!
தனித்துவம்  என்னிடம் இல்லை! இது  தன்நம்பிக்கை வெறி!
தாழ்ந்து போகமாட்டேன்!
தங்கம் போல படித்தவனா நீ  என்றால் ?,
தரம் தெரியாது எனக்கு!
தனிமரம் வலைக்கு
தனிமையில் பின் தொடர்வோர் 181
தாண்டுவேன் மலைகள் பல[[
தாண்டிய கடல் எல்லை
தட்டில் வைக்கும் தானக்காசுபோல இல்லை
தனிக்கை சட்டம் தாண்டியவன்
தந்தையை இழந்தாலும்
தன்நம்பிக்கை
தயங்காதவன்!.

புரிந்தவர்கள் வாருங்கள். மொய்க்கு மொய் வைக்கும் வசதி இல்லாத அகதி இந்த தனிமரம் என்று கும்பிட்டு உத்தரவு வாங்கும்
இவன்.
பாரிசில் வெட்டிப்பயல்[[[
தனிமரம்.


இனி  இந்த பாடலை நீங்கள் கேட்டவாறு[[[[

குத்துங்க எஜமான் குத்துங்க[[[[


12 comments :

வைசாலி செல்வம் said...

வாழ்த்துகள் ஐயா..தங்களின் முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள் ஐயா.தொடரட்டும் தங்கள் கதை பயணம்..

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்ச்சி
தொடருங்கள் நண்பரே

கரூர்பூபகீதன் said...

வாழ்த்துக்கள் சகோ -தொடரை படிக்க இனி தொடர்ந்து வருவேன்!!!

வலிப்போக்கன் - said...

புரிந்தவர்கள் வாருங்கள். மொய்க்கு மொய் வைக்கும் வசதி இல்லாத அகதி இந்த தனிமரம்

KILLERGEE Devakottai said...

வணக்கம் நண்பரே தொடருக்கு வாழ்த்துகள் தொடர்கிறேன்.....
காணொளி அருமையான பாடல்.

Ramani S said...

எதிர்பார்ப்பைத் தூண்டும்
அருமையான முன்னுரை
ஆவலுடன் காத்திருக்கிறோம்..
வாழ்த்துக்களுடன்...

திண்டுக்கல் தனபாலன் said...

சரி... பாடலுடன் தூள் கிளப்புங்கள்...

ரூபன் said...

வணக்கம்

தங்களின் பதிவை இரசித்து படிப்பவன். நீண்ட நட்களுக்கு பின் தங்களை வலையுலகில் காணும் போது மகிழ்வு. தொடருங்கள்... பாடல் மிக அருமையாக உள்ளது த.ம 6

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Nagendra Bharathi said...

வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

இன்னாது? வராங்காட்டியும், மொய்க்கு மொய் வைக்கலினாலும் நாங்க எல்லாம் வருவோம்ல....நாங்களும் பல தடவை லேட்டா வந்து மொய் வைக்காம போயிடறோம்ல...ஹும் சினேகா படம் போடுற வரைக்கும் வருவோமாக்கும்...ஹிஹிஹி
தொடருங்கள் தனிமரம் நேசன். நாங்களும் தொடர்கின்றோம்...

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

நன்றே
இனிய தொடரைத் தொடர
சின்னப் பொடியன் - நானும்
வாழ்த்துகிறேன்!

Anonymous said...

வாசித்தேன் சகோதரா முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.