15 March 2016

யா-சி---க்கும்- ஏ-தி-லி----3


யாசிப்பு முன்னே இங்கே-http://www.thanimaram.org/2016/03/2.html.


பாரிசில் பார்த்தேன்
பாலான வாலிபம் பூத்தது
பாவை நீ என் நெஞ்சம் என்று
பாடல் தேடினேன் நீயோ
பாதை காட்டினாய் !!
பலமலையும் கடக்கின்றேன்
பாதைகாட்டும் குருவாக இன்று! நீயோ
பாதம் பணிகின்றாய் !
பாவமன்னிப்பு கேட்டு!!!
படிக்காதவன் ! படம் நீ
பார்க்காத பாவை!!
           (யாதவன் நாட்குறிப்பில்)

இனி ...

அவசர உலகின் அவலத்தைக்காண வேண்டும் என்றால் ஐரோப்பாவின் பாரிஸ்நகரின் மையம் கார்டிநோட்  பக்கம் போய்ப் பார்க்க வேண்டும்! எத்தனை மனிதர்கள் !!எத்தனை குணம்!! இந்த நகரில் இருந்து புறநகர்களுக்கு நகரை அண்டிய ஊர்களுக்கும் செல்லும் ரயில்கள் பல.


 அப்படிப்போகும் ரயில்களில் ஒன்றில் பயணம் செய்தால் தான் யாதவன் அடிக்கடி செல்லும் அந்த ஆலயத்துக்கு செல்ல முடியும்!


 வழமையாக வேலைமுடிந்தவுடன் அவனும் விரைந்து நடந்து கார்டிநோட் ரயில் தரிப்பிடத்து மேடைக்கு சென்ற போது தான் அந்தக்குரல் அவன் காதில் விழுந்தது !


எங்கேயோ கேட்டகுரல் போல ஆம் இந்தக்குரலுக்கு சொந்தக்காரி பூவே பூச்சுடவா பானுமதி போல ஒரு பாட்டித்தான் .

யாதவனை சிறுவயது முதல் தோலில் தாங்கிய அயல்வீட்டு   சொந்தம் செல்லம்மா பாட்டியின் குரல் இலங்கை வானொலி அறிப்பாளினி ராஜேஷ்வரி சண்முகம் போல யுத்தம் என்ற அரக்கன் நாட்டைவிட்டு அகதியாக  புலம்பெயர்ந்து வந்தாலும்! பூர்வபூமி சொந்தத்தை விட்டுக்கொடுக்காத சோலையம்மா போல தம்பி இந்த ரயில் லார்க்கூநோவ் போகுமோ ?,என்று மேடையில் இருக்கும் தமிழ் பேசும் நெஞ்சங்களிடம் தயக்கம் எதும்மில்லாது கேட்கும் 16 வயதினிலே குருவம்மா போல )))அவர்களின் பதில் வர முன்னமே வந்து கொண்டு இருக்கும் ரயில் அங்கு போகும் என்னைப்போல என்று உள்வந்தன் யாதவன் சினிமாவில் பாட்டுடன் அறிமுகமாகும் ஹீரோ போல!


 எப்படிச்சுகம் பாட்டி ?,நீங்க வருவதாக தொலைபேசியில் அழைத்து சொல்லியிருந்தால் நானும் காத்து இருப்பேனே !நீ மாலைபோட்ட சாமி உன்னை தொந்தரவு செய்ய விருப்பம்மில்லை. அத்தோடு வேலையில் ஒருப்பக்கம் ;ஆலயத்தில் தொண்டு என்று அதிகம் அங்கலாய்ப்புடன் திரிவாய் !நான் வயசானவள்! எதுக்கு கஸ்ரம் கொடுப்பான் என்றே கட்டிப்பிடித்து முத்தம் தரும் பாரிஸ் கலாச்சாரத்தையும் பின் பற்ற மறக்காத இந்த செல்லம்மா பாட்டிதான்  குரு வழிபாடு பற்றி ஏதுவுமோ தெரியாத என்னையும் குருவுக்கு ஏற்ற சிஷ்யன் போல இன்றும் ஆன்மீகப்பக்கம் தலைவைக்க காரண கர்த்தா என்றால் மிகையில்லை !


வழிகாட்டிய செல்லம்மா பாட்டியினையும் தாண்டி இன்று உயர்ந்த அனுபவத்தையும் ,பலரை நெறிப்படுத்தி பின் பற்ற அந்த ஆபத்பாண்டவன் கருணையே அன்றி வேறில்லை.!


என்ன பாட்டியும் பேரணும் பாசப்பறவைகள் போல ஜோடி சேர்ந்தாச்சா ?,என்னை மறந்திட்டீங்கள் போல ?,,அடிப்போடி உன்னை மறக்கவில்லை! உனக்கு முதல் என் மடியில் தவன்றவன்  இவன்!


 நீ தான் எல்லாவற்றையும்  ஈழம் என்ற கற்பனைக்கனவில் எல்லாம் தொலைச்சுப்போட்டு  இன்று புலம்பெயர் தேசத்திடம் கையேந்தும் முன்னால் அபளைகள்  போலத்தான் சுயம் இழந்து இரந்து நிற்பது வெட்கம் தான்! நீயும்  படித்தவள்  பிரெஞ்சில்! ஆனால் நான்  5 தலைமுறை பார்த்த படிக்காத மேதை பாசத்தில் !! என் வம்சம் வயிறு எரியுது ஏன் சொந்த நாட்டை விட்டு அகதியாக இங்க வந்தேன் என்று!

 நீ சிரிப்பாய்  என் பேரன் ஏதோ சினிமா நடிகை போல  உன் பின்னே லோ லோ  என்று வெட்டியாக கால்ஷீட் கேட்டு அவள் பின்னே ஓடும் குதிரை அல்ல !அவன் !! காசுக்கு கூட தூசு இல்ல நம் வியாபார வித்துவ செருக்கு! வெற்றிலை போட்டு துப்ப இது என்ன பாட்டி சொல்லைத் தட்டதே படம் எல்லாம் நீ பார்க்காதவிடயம்!  நீயும் சிவக்க ஆம்பிள்ளை வேணும் !


  இதுக்குத்தான் உன்கூட எங்கும் வருவதில்லை என்ற கோபப்பார்வையை விலக்கி யாதவனை நோக்கினால் யாழிலி!6 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

யப்பா... எத்தனை படங்களும் பாடல்களும்...

putthan said...

படங்களுடன் கதை நன்றாகவுள்ளது.....தொடருங்கள்

Thulasidharan V Thillaiakathu said...

அட! தனிமரம் நேசன் தமிழ் திரைப்படங்களை நல்ல நினைவில் வைத்திருப்பீர்கள் போலும்..கதையில் அதை உட்படுத்திப் படங்களுடன் சொல்லும் விதம் நன்று. தொடர்கின்றோம். யாழினியின் கோபத்தை அடக்க யாதவன் என்ன பாடப் போகிறார்...!!!?

KILLERGEE Devakottai said...

கதம்பமாலை அருமை நண்பரே
த.ம

Ajai Sunilkar Joseph said...

யா-சி---க்கும்- ஏ-தி-லி----3

படங்களுடன் அருமை நண்பரே...

கரூர்பூபகீதன் said...

விவரிக்கும் பாங்கு அருமை சகோ தொடர்ந்து அந்த ரயிலை போல விரையட்டும்! யாழிலியின் கோபத்தை அறிய தொடர்ந்து வருகிறேன்!