24 March 2016

யாசிக்கும் -- ஏ--தி --லி -4

முன்னம் இங்கே யாசிப்பு-http://www.thanimaram.org/

இனி...

கனவு தொலையும்
கவிதை தொலையாது
கற்கவில்லை வெண்பா!
கடந்து போகும் காதலும்!!
கற்றவன் என்றால் தூற்றும் உலகம்!
கல்லாதவன் கடந்தேன்  கவிதை மட்டுமா
கடல் கூடத்தான் !!கன்னியின் காதலும்
கடந்தேன்! ஏதிலி  நான் !!!
கடம்பமரம் முதலில்
கடைசியில் பூசை எனக்குத்தான்!
                                   (  யாதவன் நாட்குறிப்பிள்)


பார்த்திருந்தேன் உன்னையே  எதிர்பார்த்திருந்தேன் உன்னையே  என்றது விஜய் பாடல் போல பார்வையோ இல்லை பார்த்தாலே பரவசமே  மாதவன்  சிந்தனைச் சாரல் லயிப்போ அதன் பதிப்பில் பார்த்தேன் பார்த்தேன் சுடச்சுட ரசித்தேன் என்ற பிரசாந்த்  கனவோ  பார்வை ஒன்றே போதுமே  குணால் என்பதா இல்லை பார்க்காத என்னைப் பார்க்காத என்ற ஆறு  சூர்யா  தவிப்பு  பார்வையா இல்லை என்றும் இனிமை பாராமல் பார்த்த நெஞ்சம் என்ற  பூந்தோட்டாக்காவல்க்காரன்  பாடல் ஆனந்து  ஹீரோ போல அல்ல யாழினியின் பார்வை !

இது பார்வை ஒன்றே போதுமே பட மோனல் போலும் அல்ல உன்னை நினைத்து பட சினேஹாவின் தண்ணீர் இறைக்கும் காட்சிபோல  அக்கினிப் பார்வையை அதனை உள்வாங்கும் திறமையில்லாதவன் போல அல்ல  யாதவன் .!வேட்டையாடு விளையாடு பட பார்த்த முதல்நாள் என்று கமல் போல இன்னும் டூயட் பாட ஹீரோ அல்ல!இதை மட்டும்மா நீ உலக சினிமா பார்த்து இருந்தாலும் நம் அயல் தேச  நடிகை பட்டியல் சொல்லி இவளை கவர்ந்து சொல்ல நினைக்கும் ஆசை எனக்கில்லை!!
 ஏன்னா நீ பிறக்கும் முன்னமே உன் தாய் குமரியாக  என்னை தூக்கியவள் மருமகன் என்ற மாமியாக !இந்த கலாச்சார போராட்டம் யுத்தம் என்ற போர்வையில் சிதைந்த கனவு எழுத நான் என்ன தனிமரம் வலையில் வெட்டியான் எழுதிய கதை போலவா!

யாழினி விழிப்பார்வை சொல்ல மறந்த கதை போல கூர்வாள்கொண்டு கீறும் ஓவியக்காதல் என்று நினைக்க இது என்றென்றும் காதல் போல !அல்லது  எங்கே எனது கவிதை என்று பாட கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மம்முட்டி காலம்  அல்ல இன்றைய வாழ்க்கை .  

காலம் மாறிப்போச்சு என்று கதை பேச நினைத்தால் நிச்சயம் சிறையில் இருப்போர் விடுதலை எப்போது என்ற உறவுகளின் நிலைபோலத்தான் யாழிலினியின்  பார்வையின் பின்னே இருக்கும் மூடுமந்திரம் !


ஆனாலும் பாட்டி கதைக்கத் தொடங்கினால் மதுரை முத்துவின் கமடி  இடைவிடாத வண்டி ஓட்டல் போல சிரிக்கலாம் ,சிந்திக்கலாம், ஆனாலும் இப்போது சிரிக்கும் நிலையில் யாதவனும் இல்லை! யாழிலினியும் இல்லை  இது தாய்லாந்தில் முறிவடைந்த  இலங்கை அரசு -புலிகள்  சமாதான பேச்சு வார்த்தை போல!

  ஆனாலும் ஊடகங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டிய நிலைபோல பாட்டியின் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டும். என்ன சாமி இந்த வருசம் மலைக்கு போறீயா ?, காசுப்பிரச்சனை என்றால் ஜோசிக்காத நான் தாரன் போயிட்டுவா. அப்படியே இவளுக்கும் ஒரு நல்ல வழிகாட்ட பிரார்த்தனை  செய்!

 என்று எங்கு சுற்றினாலும் பேச்சின் இறுதியில் காதலைச்சொல்ல வந்து நிக்கும் சொல்லாமலே லிவின்ஸ்ரன் நிலைபோலத்தான் நாக்கினை அறுக்க வேண்டும் போல ஆன்மீக கார்காலத்தில் .

இப்படி மனதினை காதலில் அலைபாயும் மனதினை அடக்கியாளுவதும் திருவிளையாடல் தருமி போலத்தான் என்னையும் அடக்கி காதலும் கடந்து  போகும் என்று கடிதம் எழுத பயணங்கள் பதிவர் அல்ல பாரிசில் வாழும் சாமானியன் என்று சொல்ல நினைக்கும் போதே மனதில் வலி அது தமிழிலில் பாட   இப்படி நினைத்தாலும்

 சொல்ல வந்தேன் நான் சொல்ல வந்தேன் என்ற  காதல்சொல்லவந்தேன் கார்த்திக் நடித்த படம் பாடல் வெளியாகியும் படம் வெளிவராமல் போனது போலத்தான் !


 யாழினியும்  ஏதோ சொல்ல வாய்திறந்த போது அவளின் கைகேசி ஒலித்தது !இந்த ரிங்டோன் அந்தப்பாடல் இது!தொடரும்.

8 comments :

இமா said...

ஹாயா வாசிச்சு... 'ஒண்டும் விளங்கேல்ல!' என்று கொமண்ட் போடப் போகேக்க தான் விஷயம் வெளிச்சுது. :) தொடர்! பொறுங்கோ, முதலிருந்து வாசிச்சுக் கொண்டு வாறன் நேசன்.

KILLERGEE Devakottai said...

பாடலை மிகவும் ரசித்தேன் நண்பரே அருமை.
த.ம. 2

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான தொடர்
நகர்வு நன்று
தொடருங்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தொடர்கிறேன் நண்பரே

Nagendra Bharathi said...

அருமை

வலிப்போக்கன் - said...

தாங்கள் பதவில் குறிப்பிடப்பட்டஎந்தப் பாடலையும் யான்கேட்டதேயில்லை நண்பரே...ரசிக்க தெரியவில்லை என்னவோ...???

putthan said...

காதலும் அரசியலும் கலந்த காதல் கதை சொல்லியுள்ளீர்கள் .....தொடருங்கள்

கரூர்பூபகீதன் said...

காதல் சினிமா அரசியல் கலந்த காதல் கதை! கதை நகர்வு அருமை சகோ -விட்டுவிடாமல் தொடர்கிறேன்!