25 April 2016

யா-சிக்கும்--- ஏ-தி-லி--7

முன்னர் யாசிப்பு இங்கே-http://www.thanimaram.org/2016/04/6.html

மனமும் உடலும் சிலிர்க்கின்றது!
மனதோடு மழைக்காலம் போல
மந்தார மாலையில்
மனம்  போன போக்கில் நீ
மறந்தவன் பின் வரும் இந்த நிமிடம்!
               ( யாதவன் நாட்குறிப்பில்)காத்திருப்பு என்பது கவிதையாக சொல்ல வேண்டும் என்றால் வீரகாளி அம்மன் கோவில் விருச்சமரம் கூட என் பொறுமை சொல்லும் என்பதா? கதையாக சொல்ல இது என்ன கோகுலம் படம் பானுப்பிரியா நிலை போல அல்லது பூவே உனக்காக விக்ரமன் கதை போலவா! இல்லை இன்னும் விடுதலைவரும் என்று விடுதலைக்கனவுக்கு விரும்பியும், விரும்பாமலும் போய் சிறைக்கம்பிகள் பின்னே சிந்தும் கண்ணீருக்கும் வலிகள் உண்டு காத்திருப்பின் நிலை சொல்ல !!

அவசர உலகில் காத்து இருப்பது என்பது தமிழ்த்தலைவர்களுக்கு சாத்திய மாகலாம் தங்கள் வாரிசுகள் சுகமாக வெளிநாடுகளில் வாழ்வதாள்! ஆனால் ஒரு வாலிபனுக்கு கலியாணச்சந்தையில் காலம் எல்லாம் நீ வேண்டும் என்று காதலுடன்  காத்திருப்பது என்பது எத்தனை அவஸ்த்தை என்பது பொதுவெளியில் பலருக்கும் புரியாத உளவியல் போராட்டம்!

.பொறுப்புக்கள் சுமந்து; கடமைகள் முடிந்து கலியாண கனவு தோன்றும் போது தலையில் இருந்த பொன்முடி  களவாடப்பட்டுருக்கும் அதிவேக சமையல் அறையின் வெப்பத்தால் அது அமைதிப்படை  சத்தியராஜ் அம்மவாசை போல!

அடுத்த வீட்டு தம்பிக்கும் கலியாணம் முடிவாச்சாம் !நீ எப்ப  கலியாணம் கட்டப்போறாய் ,,என்று இன்று போன கலியாணவீட்டிலும் உன்னைப்பற்றித்தான் பருவத்தே பயிர் செய்யனும் ஒழுக்க விதிமுறை ஓதல்கள் என்று  பேச்சு!

 நீயோ மலைக்குப்போறன் என்று எங்கள் பேச்சையும் கேட்பதில்லை !பெற்றவளின் பேச்சையும் கேட்பதில்லை .


உன்னால் பொது இடங்களுக்கு போக முடியவில்லை! உன் வருமானத்தை வாங்கிப்பதுக்கின்றோம்மாம் பானாபத்திரிக்கைச்செய்தி போல என்றல்லவா இருக்கு நம் நிலை! .

இது எல்லாம் உனக்கு தெரியாதா?, இதுவரை உன்னிடம் 5 ஈரோகூட உரிமையுடன் கடன் வாங்கியதில்லை என்று உனக்கு மட்டும் தெரியும் நிஜம் !என்று உடன் பிறப்புக்களின் ஓயாத புலம்பல் எல்லாம் தெரியாமல் போகுமோ காத்திருக்கும் போது?,


 வார்த்தைகளின் சதுரங்க வேட்டை ? அவசரக்குடுக்கை என்று உள்குத்து போட்டால் நான் என்ன செய்வேன் யாழினி ?,


ஒருவனின் இயல்பை மாற்ற முடியுமா?, அப்படி வழி இருந்தால் சொல்லித் தரலாமே சொல்லித்தரவா மஜா பாடல்போல?வார்த்தையாள் சுடுவது என்றால் நானும் அதிகம் சுடுவேன் பன்றித்துண்டு வத்தல் போல அதுமட்டுமா! கிரேப் போல கல்லில் சுடவும் முடியும் என்று உன்னிடம் சொல்ல மனம் துள்ளினாலும்!

 ஏன் உன் சந்தோஷ நாட்களில் அக்கினிசுவாலை வீசுவான் என்று நெஞ்சோடு குமுறும் என் நிலை எல்லாம் உனக்கு புரியாது!

உன் பார்வையில் நான் மோஷமான ஆண்! கட்டில் சுகத்துக்கு அலையும் நெற்றிக்கண் ரஜனி போல  காதல் பற்றி தெரியாத ஆவரம்பூ பட வினித் போல .

ஆனால் சாமி என்று இந்த வழியில் போக காரணம் உன் காதல் என்ற உண்மை சொன்னால் தென்றல் சுடும் படம் போல !

இன்று நீ இப்படி அழகாய்  என்னோடு   அருகில் வருவதைப் பார்க்கும் போது என்னருகில் நீ இருந்தால் படம் போலத்தான் நல்லாட்சியில் இணைந்த பெருங்கட்சிகள் போல என்று எல்லாம் மனம் எண்ணும் !ஆனால் உனக்கு  புரியுமா??காதல் என்றாலே அகதியின் யாசகம்  குடியேற்றம் பெற இன்னொரு வழி என்று நினைக்கும் உன் போன்றோரின் சிந்தனைக்கு அகதியாக உள்ளே வரும் இந்த நாட்டு இயல்பு எல்லாம் கடிதம், கவிதை என்று எழுத இது பொக்கிஷம் படம் அல்ல!

 ஆனாலும் லவ்டுடே படம் இயக்கிய பாலசேகரன் ]போல செருப்பால் அடிக்க அவர் இப்ப சினிமாவில் இல்லாது போனாலும் அவர் போல நச்  என்று சொல்ல ஆள் இல்லை! என்ன யாதவன் உள்குத்து ஊமையாச்சோ?, சொல்லாமலே லிவிஸ்ரன் போல இல்லை  யாழினி!

ஆமா யாதவன் எப்படி உன்னால் எப்போதும் வசூல்ராஜா பிரகாஸ் ராஜ் போல சிரிக்க முடியுது![[ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கின்றாய் என்ற
 காலம் எல்லாம் இறந்தகாலம் அழுகை என்றால்அதையும் கடந்து வந்தவன் இவன் இது திமிர் அல்ல தன்நம்பிக்கை!

நிகழ்காலம் சிரிப்பு ஒன்றே மூலதனம் நானும் ஒரு வழிகாட்டி !

தொடரும்.....

4 comments :

Ajai Sunilkar Joseph said...

மனமும் உடலும் சிலிர்க்கின்றது!
மனதோடு மழைக்காலம் போல
மந்தார மாலையில்
மனம்  போன போக்கில் நீ
மறந்தவன் பின் வரும் இந்த நிமிடம்!

அருமை வரிகள் நண்பரே...

தொடருங்கள் நண்பரே

KILLERGEE Devakottai said...


ரசித்தேன் நண்பரே காணொளி திறக்கவில்லையே.....
தமிழ் மணம் 2

Thulasidharan V Thillaiakathu said...

ரசித்தோம்....சினேகா வந்துவிட்டார் மீண்டும் ஹிஹிஹி...தொடர்கின்றோம்...

வலிப்போக்கன் - said...

அருமை...