25 May 2016

வாங்க மின்னலுக்கு பூ கொடுப்போம்[[[[

வலையுலகில் நகைச்சுவையை மையம் கொண்டு சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து தனித்துவத்துடன் பதிவு எழுதுபவர்கள் பலரில் அதிக நட்புக்களை அன்பால் ஈர்த்தவர் இந்த வார்த்தியார் என ஒரு சிலர்  சொல்லக்கூடும் ))


அந்த  அன்பு வார்த்தையை தனிமரமும் வழிமொழிகின்றேன் .என் ஆரம்ப கால பதிவுகளில் அதிகம் தட்டிக்கொடுத்து, ஊக்கம் கொடுத்து ,எழுதத் தூண்டியவர்  கணேஸ் அண்ணாச்சி .

அன்பில் எங்களுடன் பதிவாளினி ஹேமாவின் தளத்தில் போட்டிக்கு எழுதிய கவிதை இன்னும் மறக்க முடியாது !
கணேஷ்...

நிலவைக் காட்டி
சோறூட்டினாள் தாய்...
அவள் முகம் பார்த்து
சாப்பிட்டது குழந்தை!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனித்தனியே வந்து
ஒன்றி‌ணைந்த பாதைகள்
சேர்த்தன எங்கள் கரங்களை..!
கோர்த்த கரங்கள் பிரிந்தன
இன்னொரு பாதைச் சந்திப்பில்!

உன் வழி உனது என் வழி எனதென
பிரிந்து சென்றவள்
மீண்டும் வரவேயில்லை..
இன்னும் காத்திருப்பில்...
பனி படர்ந்த காலையும்,
சாலையும், தனிமரமாய் நானும்!
http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post.html


பாதை,பாசம் ,நிலா என அவரின் கவிதை ஈடுபாடு வியப்பிக்க வைத்தது.

 ஆனாலும் தொடர் என்றால் அது நடைவண்டித்தொடர். அடுத்து எப்ப வெளிவரும் என்று காத்திருந்து பின்னூட்டம் இட்ட பசுமையான நாட்கள் மீண்டும் வராதா? என இன்றும் மனம் விரும்புகின்றது.


நல்ல படைப்புக்களை பலர் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் இவரின் மேய்ச்சல் மைதானம் வலைப்பதிவு ஒரு தகவல் களஞ்சியம் .http://horsethought.blogspot.fr/2013/05/blog-post.html

சிறுகதை எழுதுவதில் கில்லாடி, இவரின் அம்மா கதை இன்னும் பலர் படிக்க வேண்டியது.
http://minnalvarigal.blogspot.com/2012/04/blog-post_08.html

  நல்ல நடிகர் நூல் ஆசிரியர் என  பன்முகம் கொண்டவர் .வலைச்சரத்தில் முத்திரை பதித்தவர் .மொக்கைப்படம் பார்த்த அனுபவம் இங்கே[http://minnalvarigal.blogspot.com/2013/04/blog-post_20.html

இன்றை புதியவர்களுக்கு இவரின் இலக்கிய ஆளுமை பற்றி அதிகம்  தெரிந்து கொள்ள ஆர்வம் எனில் இங்கே பார்க்கலாம்.http://minnalvarigal.blogspot.com/2012/05/16.html

சென்னைப்பதிவர் விழா சிறப்பாக அமைய அண்ணாச்சியின் பங்களிப்பும், பணியும் அளவிடமுடியாத சேவை எனலாம் !

ஏனோ வலையுலகில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் இன்று அவரை முகநூல் பக்கங்களில் மட்டும் பதிவை பகிர்கின்றார்.


 என்றாலும் மீண்டும் தாய்வீடு போன்ற இந்த வலையுலகில்  முன்னைய கலகலப்புடன் மீண்டும் நண்பர் வரவேண்டும் என்பதே என் போன்ற  வழிப்போக்க வாசகர்களின் வேண்டுதலாக இருக்கும்!http://minnalvarigal.blogspot.com/2013/10/blog-post.html

 என்னடா தனிமரம் இன்று மின்னல்வரிகள் கணேஸ் பற்றி நினைவுபடுத்துகின்றது? என நீங்கள் நினைக்கலாம்.!

இன்று அவருக்கு ஒரு சிறப்பான நாள் !26/5/-- /ஆம் அன்பு அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் இன்றை தினம் .


காலத்துக்கு காலம் வலையில் வந்து போகும் பல உறவுகளில் இந்த தனிமரமும் வலையுறவுகள் சார்பாக கடல்கடந்து இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் .மின்னலுக்கு  பிறந்தநாள் வாழ்த்துப்பூ தர சினேஹா சார்பில் திருமதி தமிழ் அவர்கள்  மின்னல் வீடு நோக்கி [[[[!


வாழ்த்துவதற்கு வயது ஒரு தடையல்ல நல்ல இதயம் போதும் என்ற அண்ணாச்சியின் வார்த்தையை கடன் வாங்கியே அன்பு பாடலை பரிசாக காற்றில் கலந்து விடுகின்றேன் !.என் வாழ்த்தையும் நோய் நொடி இன்றி என்றும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்!


 .அண்ணாச்சிக்கு இந்த பாடல் அதிகம்  பிடிக்கும்  ஏன் என்று நான் அறியேன்[[ பூரிக்கட்டை அடி அமெரிக்கா வரை புகழ்[[[ இந்தப்படம் இலங்கை ரூபவாஹினியில் ஒளி/ஓலிபரப்பாக எத்தனை விளம்பர இடைவெளி இம்சை என்பதை தாங்கிய நெஞ்சம் இந்த ஏதிலி[[[என்றும்
நட்புடன்
தனிமரம்
பாரிஸ்.
7 comments :

கவியாழி கண்ணதாசன் said...

நம்மூர் நடிகையின் வயதும் நம்ம வாத்தியார் வயதையும் கேட்கக்கூடாது.காரணம் எப்போதும் இளைஞர் கூட்டதுடனேயே தானும் இளைங்கனாக இணைத்துக் கொள்வார்.அவ்வளவு நல்ல உள்ளம் கொண்ட நண்பருக்கு இனியப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் நண்பா!!!

பால கணேஷ் said...

அடாடா... ஓராண்டுக்கும் மேலாக வலைத்தளம் பக்கம் தடம் பதித்திராத என்னை இப்பவும் நினைவுகூர்ந்து இப்படிபொரு அன்பில் தோய்ந்த வாழ்த்தை வழங்க ஒரு தனிமரம் இருப்பதைக் காண்கையில் பேருவகை கொள்கிறது நெஞ்சம். இந்த அன்பிற்காகவேனும் முகநூல் தவிரவும் இந்தப் பக்கம் வர வேணுமடா என்று ஒருபுறம் மனக்குரல் ஒன்று கேட்கிறது. மீண்டு(ம்) வர முயற்சிக்கிறேன் நேசன். மனசை மகிழ்ச்சியால நிரப்பிய வாழ்த்துக்கு என் மனம் கனிந்த நன்றி.

அந்தப் பாடலில் இருக்கும் இயல்பான நகைச்சுவைக்காகவும், ஜென்ஸியின் குரலுக்காகவும் எனக்கு அது மிகமிகப் பிடிக்கும் நேசன். இப்போ உங்கள் வாழ்த்துக்களோ மறுபடியும் பாத்து மகிழ்ந்துட்டேன்.

‘தளிர்’ சுரேஷ் said...

வாத்தியார் பாலகணேஷ் சாரின் அன்பையும் புதிய வலைப்பூ எழுத்தாளர்களை அவர் தட்டிக்கொடுத்து வளர்ப்பதையும் என்றும் மறக்க முடியாது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

KILLERGEE Devakottai said...

வாத்தியாருக்கு எமது வாழ்த்துகளும்.....

கரந்தை ஜெயக்குமார் said...

எனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் நண்பரே

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நாங்களும் சேர்ந்து வரவேற்கிறோம். சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசிய பொது நானும் மீண்டும் பதிவுகள் எழுத வேண்டுகோள் விடுத்தேன்.பன்முகத் திறமை மிக்கவர். அவருக்காக ஒரு பதிவிட்டதற்கு நன்றி நேசன்

Dr B Jambulingam said...

உங்களுடன் எங்களது வாழ்த்துகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவரைப் பற்றிய தங்களின் அறிமுகம் அருமையாக இருந்தது.