03 May 2016

தாகம் தீர்க்கவா.


எம்மவர் இசை ,எம்மவர் பாடல், எங்களுக்கான மேடை இதுவே மெல்லிசை என்பது இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன சந்தனமேடையின் நிகழ்ச்சியின் தாரக மந்திரம் .

80 இன் பின்னும் 90 களிலும் இலங்கைக் கலைஞர்கள் பலருக்கு இந்த மேடை ஒரு வரப்பிரசாதமாக இருந்தது என்பது வரலாறு. இலங்கை மெல்லிசையின் தனித்துவம் மேலோங்க சந்தனமேடையில் மின்னிய பலரினை இனவாத யுத்தம்  காலச்சுழற்ச்சியில் பலர் மறந்தாலும்!மறைந்தாலும்

 எதிர்கால வரலாற்றுக்கு சான்றாக ஏட்டில் எழுத வேண்டியது காலத்தின் கட்டாயம் இருக்கு.

அரசகரும மொழித்திணைக்களம் இன்னும் இனவாத கொள்கையில் இருந்து மீளவில்லை என்பதை இலங்கை அமைச்சர்களே பொதுவில் பேசும் போது சாமானியர்கள் எதை எதிர்பார்ப்பது நல்லாட்சி இது  என்ற கோஷத்தில் !

என்றாலும் வரலாற்றில் அனுபவத்தில் இருந்து இந்த இணையத்தில் அங்கங்கே நானும் தனிமரத்தில்  80 இன்/90 இன் காதல்ஜோடிகள் தம் பெயரை மரத்தில்  கீறும் கோடு போல சின்னப்பூவே மெல்லப்பேசு படத்தில் பிரபு ,சபீத்தா ஆனாந் ஜோடி எழுதுவார்களே அப்படித்தான்))  நானும் எழுகின்றேன் தனிமரத்தில்)))


சந்தனமேடை  நிகழ்ச்சி இலங்கை நேரம் பிற்பகல் 2 மணிக்கு பிரதி சனி மதியம் வானொலியில் கேட்கும் அறிமுக இசையும் அதைத்தொகுத்த அறிவிப்பாளர்கள்/ளிகளின் குரல்களும் இன்னும் நாடு கடந்தாலும் காதில் ஒலிக்கின்றது .

மனமோ அங்கேயே இன்னும் நினைவைச் சிறைப்பிடிக்கின்றது.
 அடிக்கடி தில்லையகத்தார் துளசிதரன் சார் பின்னூட்டத்தில் கேட்பது  ?

எப்படி தனிமரம் இத்தனை பாடல்கள் ,இத்தனை திரைப்படங்களை , நினைவில் இருத்தி தொடருக்குள் புகுத்தும் விந்தை ?

அந்த திறமையின் சூட்சுமம் என்ன என்று ?

இதில் ரகசியம் ஏதும்மில்லை  !

வானொலி அறிவிப்புக்கு முதல் திறமையே சுயதேடல் மெல்லிசை,துள்ளிசை,சினிமா பாடல்களும் ,சிறந்த படங்களும் அதில் இருக்கும் இலக்கிய ரசனைகளும் ,சுய வாசிப்புக்களும் தான் நிகழ்ச்சி படைக்க ஆக்கபூர்வமான வழிகாட்டி. அதனை எப்படி   நேயர்களுக்கு ஊடுகடத்துவது என்பதே  ஒரு வானொலி அறிவிப்பாளர்/ளிகளின் பிரதான வெற்றியாகும் .

என் சிறுவயதுக்கனவு வானொலியோடு பயணிக்க வேண்டும் என்பதே!

இசை என்னை அதிகம் செதுக்கியும் , சிலதில் சிதைத்தும் இருக்கின்றது என் பால்ய காலத்தில் !

அதனால் தான் இன்றும் மீள அசைபோடும் மாடுபோல  தொடர்களில் பாடல்களையும் ,கவர்ந்த படங்களையும் ஒன்றினைத்து தொடர் பேசுகின்றேன் )))


புதியவர்கள் பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததா ? எந்த காலத்தில்? பாடல் இருந்ததா??  என்ற சிந்தனைத்தேடலுக்கு ஒரு உந்து சக்தியை  தூவிச்செல்கின்றேன் தொடரில்)))

தொடருக்கு பாடலும், சினிமாவும் மெருகூட்ட வழிகாட்டியதே இசையும் கதையும் என்ற இலங்கை வானொலியின் நிகழ்ச்சிதான் !

பல பிரதிகள் எழுதினாலும் அதில் ஒலிபரப்புக்கு தேறியது  சிலது என்றாலும் அந்த வெற்றியும் கூட  எழுத்துப் போதையை தந்ததும் அதை பின்புலமாக்கி தொடர்கதை எழுதி பட்ட வடுக்கள்  இன்னும் மறக்கமுடியாது.

எத்தனை கால காத்திருப்புக்கு பின் மீண்டும் வலையில் இந்த தொடர்  பெற்ற வெற்றிப்போதை!


 இன்னும் தொடர்கள் எழுத உற்சாகம் தருகின்றது இந்த தனிமரத்துக்கு))).

பாடல் பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றி நண்பர்களுடன் விடிய விடிய பேசவும் ,எழுதவும் இந்த மெல்லிசையுடன் தொடர்பு படவர்களின் நட்பும் என்னையும் இன்னும் கடல்கடந்தும் முகநூலில் தேடி வரவைக்கின்றது!

அப்படியான பாடல் விரும்பிய நேயர்களில் நானும் ஒருவன் .


விரும்பிய ஒரு பாடல் பற்றி நீண்ட நாள் எழுதணும் என்ற ஆசை !ஆனாலும் நடுவில் சில பக்கத்தைக் காணவில்லைப்போல பொருளாதார தேடல்))


அருந்ததி சிறிரங்கநாதன் -இலங்கை இசைத்துறையில் ,ஊடகம் ,இலக்கிய விமர்சனத்துறையில் என தெரியாதவர்கள் இருக்கமுடியாது .வீணை இசைப்பதில் மிகவும் பாண்டித்தியம் பெற்ற ஒரு வித்தகி .அருந்ததியின் மகன் 90 இன் அடுத்தலைமுறை இசையமைப்பாளர் சாரங்கன் சிறிரங்கநாதன். .இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக இருந்தவர் அருந்ததி ஒரு பெண்ணிலைப்போராட்டவாதி .

சிறிதர் பிச்சையப்பா-ஈழம் /இலங்கை என பிரபல்யமான பல்துறைக்கலைஞன் சிறிதரின் தந்தையும் ஒரு மூத்த இசைக்கலைஞர் இலங்கை கலைக்கூடத்தில் .சிறிதரின் மனைவி நிலாமதி சிறிதர் பிச்சையப்பா பிரபல்யமான பாடகி ( சிறிதர் இசைக்குடும்பம் பற்றி வேற பதில் எழுதுவேன்)

கணேஸ் ராஜ்-சந்தனமேடையில் அதிக இசையமைப்பு இவருடையதாகத்தான் இருக்கும்  என்பது நினைவுகள். வானொலி தாண்டி தொலைக்காட்சி நாடகங்களுக்கும் இசையமைத்தவர் இவரிடம் கொழும்பில் இசை கற்றவர்கள் பலரில் சிலர் பின் குறுந்தகடு வெளியீடு செய்ததும் வரலாறு அதனை இங்கே காணலாம்))http://www.thanimaram.org/2012/03/blog-post.html

மூவரின் கூட்டிணியில் உருவான இந்தப்பாடல் என்னைக்கவரர்ந்ததுக்கு முதல் காரணம் இசை அதுவும் ஒக்ரோ பாட் என்ற தோல்வாத்தியம் மற்றும் ஓகன் ஈழத்து மெல்லிசையில் அதிகம் பயன்படுத்தப்படும் கருவிகள் எனலாம்.

மழையில் நனைவது போல ஒரு சுகம் இந்த பாடலில் அதுவும் வாலிப்பத்தில் மலைகளில் நனைந்து இயற்க்கையோடு காதலில் மயங்கினால் எப்படி இதயம் குளுருமோ! அப்படி இன்றும் நெஞ்சைக்கிள்ளும் இந்த பாடல் நீங்களும் ரசிக்க  இங்கே-https://youtu.be/DKf7S-tOGCI

6 comments :

putthan said...

சாரங்கன் இப்பொழுது சிட்னியில்தான் வாழ்கின்றார்.......பாட‌கர் முத்தழகை ஈழத்து மெல்லிசை பாடல்களின் பிதாமகன் என்று சொல்லலாம்....தொடருங்கள் உங்கள் பதிவுகளை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

KILLERGEE Devakottai said...

தொடர்கிறேன் நண்பா.... காணொளி அருமை
த.ம. 2

நிஷா said...

தொடர்கின்றேன்!

கரூர்பூபகீதன் said...

பாடலையும் படத்தின் பெயரையும் ரகசியம் இப்போ அறிந்தேன்! விடாமல் தொடர்கின்றேன் சகோ

கரந்தை ஜெயக்குமார் said...

பாடலை ரசித்தேன்
தொடர்கிறேன்
தம +1

Ajai Sunilkar Joseph said...

அருமையான பகிர்வு