09 September 2016

இப்ப அப்படி நினைக்கவில்லை!!!

இருகோலங்கள் போல
இதயங்கள் இணைவதுக்கு
இளமைக்காலம் தீட்டிய
இனிய பாதை  நம் கல்விக்காலம்!


இனவாத யுத்தம் எனும்
இறையாண்மை சுருதிமீட்ட
இடையில் பிரிந்தோம் !
இருக்கின்றாயா என நீயும்?
இருப்பாளா என நானும்
இடைவிடாது தேடி  அலைந்த
இருள்ச்சிறைகள் எல்லாம்
இங்கு இல்லை என்றே
இருகைகள் விரித்தன!

இதயம் துடித்தது
இந்த தேசத்தில்
இருள்சூழ்ந்த இனம் தெரியாத
இருப்பிடத்தில் இன்னல்கள்
இடரலாம் உன் உடலில்
இயக்கம் என்று!!
இதில் கையொப்பம் இட்டால்
இந்த தேசம் தாண்டி
இரவோடு இரவாக
இன்னொரு பூமிக்கு செல்லமுடியும்!
இங்கிதமாக வார்த்தைகள்
இயம்பி இருப்பார்கள்!
இரக்கமற்ற இறைதாசர்கள்!
இல்லையோ! இந்தப்பிணம்
இனம் தெரியாத வீதியில்
இரத்தக்கறையுடன் வெறிநாய்களுக்கு
இரையாகி இருக்கலாம்!
இலஞ்சம்மாக கோடிகளில்
இறைத்தால் இருக்கலாம் மனசு வைத்தால்
இழிப்பிறப்புக்கள் கருணையில்!


இப்படியும் முயன்று
இழந்த கதைகள் பல
இன்னும் இயம்பவில்லை
இங்கு பலர் !


இருந்தும் உணர்வுகள் தீண்ட
இரவிலும் பகலிலும் விழிசிந்திய
இருப்புத்தேடல்
இணையத்தில் எல்லாம்
இன்னொரு காவியம் சொல்லும்!

இந்த நல்லாட்சியிலும்
இன்னும் பிறக்காத தீர்வுத்திட்டம் போல
இன்னும் உன்னை தேடி
இந்த ஆண்டு வரை  ஐநாவரை போய் வந்தும்
இன்னும் பிறக்கவில்லை
இனிய விடிவு! இருந்தாலும்
இன்று உன் சிறப்பு நாள்  9/9/...பிறந்தநாள்!
இருந்தாலும் வாழ்த்துக்கின்றேன்!
இன்னும் நேசிக்கின்றேன்
இந்த நேசம் பொய்யல்ல!

இசைப்பாடல்  உனக்கும் பிடிக்கும்
இலங்கை வானொலியில்
இருவரும் விரும்பிக் கேட்டவை!
இப்போது நானும்
இணைய வானொலிகள் பலதில்
இணைந்தே இருக்கின்றேன் நேயராக!
இன்னும் பலபாடல் சொல்லிக்கொடுக்கும்
இசைப்பிரியன் போல
இன்னும் தனிமரமாக!

இன்னொரு கதை எழுத
இனியும் முகம் காட்டாதே!
இந்த வடக்கும், தெற்கும்
இரயிலில் பயணிக்கும்
இனிய நேரம் இல்லை!
இப்போது அப்படி நினைக்கவில்லை
இவனும் கோழைதான்!
இந்தப்பாடல் இன்னும் வாழும்!(யாவும் கற்பனை

---------------------------------------------------------------------
அரும்பத விளக்கம்- இயக்கம்*புலிகள் என்ற இலங்கை அரசின் கைதுகள்!

7 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய இரவுகள்
இனி பிறக்கும்

murugan kani said...

வணக்கம்
அமேசான் தமிழ் இது ஒரு ஆன்லைன் ஷாப்பிங் OFFERS மற்றும் COUPONS பற்றி தெரிவிக்கும் தளம்
ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் நண்பர்கள் இந்த தளத்தில் கிடைக்கும் கூப்பன் கோடுகளை பயன் படுத்தி, உங்களது பணத்தை மிச்சம் செய்யலாம்
இந்த தளத்தில் Amazon, Flipkart, Snapdeal, Paytm, Freecharge, Jabong, Redbus, Pizzahut, Yepme மேலும் பல தளங்களின் OFFERS கிடைக்கிறது மேலும் விவரங்களுக்கு
amazontamil

வலிப்போக்கன் said...

“இளமைக்காலம் தீட்டிய
இனிய பாதை நம் கல்விக்காலம்!---- பள்ளிக்கூடம் போகாதவங்களுக்கு ....??

praveenkumar kumar said...

பகுதி நேரத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இன்று இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் இரண்டு பெரும் வேளைக்கு போனால் கூட குடும்ப செலவு சமாளிக்க முடியவில்லை .அப்படி இருக்கும் பொழுது மேற்கொண்டு எப்படி சம்பாதிப்பது என்று பலரும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

சரி வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது இன்டர்நெட் இருக்கிறது ஆன்லைன் வேலை செய்து மாதம் ஒரு 2000 சம்பாதித்தால் கூட வாடகை கட்டிவிடலாம் என்று எண்ணி நிறைய பேர் ஆன்லைன் வேலை தேடி ஏமாந்து கடைசியாக இந்த ஆன்லைன் வேலை என்றாலே ஏமாற்று என்று நினைப்பவர்கள் மத்தியில் .எங்களிடம் உள்ள நண்பர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் எடுக்கிறார்கள் .சரியான வழிமுறைகள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு முன் உதாரணம் .இங்கு ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை ஏமாற்ற எங்களுக்கு மனதும் இல்லை .நானும் உங்களை போன்று ஆன்லைன் வேலைகளை தேடி தேடி அலைந்தவனில் நானும் ஒருவன் இப்பொழுது .நான் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்குஉள்ளேன். நீங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக பணம் பெற முடியும் .நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் இல் தான் உங்களது பணம் இருக்கும் .
அதனால் எந்த பயமும் தேவை இல்லை நீங்கள் உழைக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை .உங்கள் உழைப்பு வீண் போகாது. எங்களது நேரமும் நாங்கள் வீணாக விரும்பவில்லை .தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் பயன் பெறலாம்.
நன்றி வாழ்க வளர்க
மேலும் விவரங்களுக்கு

Our Office Address
Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com
Our Websites:
Datain
Mktyping

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ !

அகரம் எடுத்து அரும்பிய கவியின்
அழகில் நட்பின் அருமை கண்டேன்
சிகரம் ஏறினும் சிந்தனை யாவும்
சிக்கிய அடியாய் சிலிர்க்கக் கண்டேன் !

யாவும் கற்பனை ! இதை நாங்க நம்பணுமா ??????

வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !
தம +1

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒவ்வொரு வரியையும் "இ" இல் தொடங்கியது அருமை கற்பனை என்று சொன்னாலும் உண்மைக்கு நெருக்கமாகவே இருப்பதாய் தெரிகிறது

Thulasidharan V Thillaiakathu said...

அருமையாக எழுதியுள்ளீர்கள் தனிமரம் நேசன்....உண்மைதானோ நேகன்!!??