12 April 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்...-2


விம்மல் இங்கே முதலில்-http://www.thanimaram.com/2017/04/blog-post_7.html


தன் குடும்பத்து பொருளாதார வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பவர்கள் பலரின்  கடைசியும் முதலுமான கலங்கரை விளக்கமாக இருப்பது எப்படியாவது  வெளிநாடு போய் சம்பாதித்து விடவேண்டும் என்ற அங்கலாய்ப்புத்தான் !

ஆனால் கனவுக்கும் ,யாதார்த்த உலகும் இடையிலான இடைவெளிப்பரப்பு எப்போதும் இனவாத அதிகாரமாட்டத்துக்கும் இது நல்லாட்சி என்ற அரசியல்மேடைக்கும் இடைப்பட்ட நிலைபோல திரிசங்கு நிலைதான்.


என்னதான் அடிப்படை வசதி இருந்தாலும் மற்றவர்களும் வெளிநாடு போகின்றார்கள், ஏன் நாமும் போகக்கூடாது என்ற எண்ணம் வந்தால் சொந்த நிம்மதியும் போய்விடும் சிலருக்கு .

"இருக்கும் பணத்துடன் இனிதே தாய்தேசத்தில் வாழும் வழியைப்பாரு என்று அன்பாக உபதேசித்தால் "நீ போய்விட்டாய் எங்கே நாங்களும் வந்தால் உங்களைப்போல பொருளாதாரத்தில் சமநிலை கண்டுவிடுவோமோ என்ற பயத்தில் தடுக்கின்றாய் என்ற குற்றச்சாட்டு எப்போதும் வளர்ந்த நாடு வளரும் நாட்டை சிதைப்பதுதான் நோக்கம் என்ற சிரியா போல சிந்திக்கும் நிலையை எப்படி மாற்றுவது ?


இப்படியான மனநிலைக்கு மருந்து என்ன ? நாட்டை சீரமைப்பதாக சொல்லிக்கொண்டே நாடு சுற்றும் பிரதமரோ ?கனவுத்தொழிட்சாலையில் மின்னும் நடிகரோ நடிகையோ இதுக்கு விளக்கம் தரமாட்டார்கள் .

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு என்று டிவிட்டரில் கூட பதில் தர தயங்கும் நிலையில் யாரிடம் சாமனியவர்கள் பதில் தேடுவார்கள் ?

தெரிந்தவர்களும், நட்புக்களும் தானே முதலில் சிந்தனை தீர்வுக்கு தோன்றும் நம்பிக்கை நட்சத்திரங்கள்  .

அப்படித்தான் யாழவனும் தன் நட்புக்களை தேடி  தன்  வேலைப்பணிமுடிய  தன் நட்புக்களை சந்திக்கும் நேர இடைவெளிக்குள்ளும்!

 அவசர உலகில் தென்றல் போல தாலாட்டும்  தான் இணைந்து இருக்கும்முகநூல் வசதியூடான     இணைய  வானொலிக்களுக்கு இடையில் முதன்மை வானொலிக்கு அன்று பின்னிரவில் ஒலிபரப்பாக இருந்த முன்னோடி காட்சிக்கு கற்பனையாக  எழுதி அவர்களின் உள்ளடப்புக்கு அனுப்பிய கவிதை போல இது !கவிதை பாடி
கடல் கடந்து வந்தேன்
கைபிடிக்கும் கனவில்
கடைசியில்
கன்னியாஸ்த்திரியாகும்
காரணம் தந்தாயே!
காதலுடன் கண்ணீரில்
காதலி!


கிறுக்கல் மெசஞ்சரில்  போய்சேர முன்னமே!இணைந்த கைக்கள் படம் போல ரயில் பயணத்தில் பாரிசின் தமிழர் அதிகம் குவியும் நகர்ப்பகுதிக்கு பயணித்தான் யாழவன் !

அவன் நட்பை எங்கோ முன்னர்  சந்தித்த நினைவில்!

.

 சிந்தனை எல்லாம் எங்கே அவன் என்ற தேடல்  தான்! இதுவரை அவனைப்பற்றி சிந்திக்க தோன்றியது இல்லை...

.  தனிமரம் வலையில் விரைந்து  ....வந்திடு கண்ணே.....! தொடர்ந்து!

5 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் வருத்தமும ஆதங்கமும் புரிகிறது
தொடர்கிறேன் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

சந்திப்பு நிகழ்ந்ததா...? ஆவலுடன்...

mohamed althaf said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Nagendra Bharathi said...

அருமை

Thulasidharan V Thillaiakathu said...

சந்தித்தார்களா தொடர்கிறோம்