24 May 2017

குடி குடி குடிக்கலாம்)))-3

கொத்தமல்லி நம் ஆரோக்கியத்துக்கு மிகவும் பிரதானமான ஒரு தானியம் எனலாம் .இலங்கை வடபகுதி சொல்லாடலான சரக்குகறித்தூள் செய்வது என்றாலும் ,மிளகாய்த்தூள் செய்வது என்றாலும்  இந்த மல்லி சேர்க்காவிட்டால்  கதாநாயகி இல்லாத படம்  போல!

 மல்லியின் சிறப்பியல்புகள் அதிகம் உடல்சூட்டுக்கு ,வாயுக்கோளாறு  ,பித்தம், அல்சர் போன்ற நோய்க்கு துரித நிவாரனி. இந்து படத்தில் வந்த கொத்தமல்லி வாசம் பாட்டை சிலர் கேட்டும் இருக்க மாட்டார்கள் படம் பார்த்ததும் கூட சிலர்தான்))  இலங்கையின் இனப்போரினால் .!

ஆனாலும் இலங்கையின் மலைநாட்டில் பல ஊர்களில்  சிற்றளவு மல்லி இன்றும் வீட்டுத்தேவைக்காக  பயிரிடப்படுகின்றது .இலங்கைக்கு அதிகம் மல்லி ருமேனியா மற்றும் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது .


.என்னதான் பெரியண்ணாவுடன் சிங்களம் முட்டி மோதினாலும் இறக்குமதிக்கு அவர்களிடமே சரணாகதி ஆகவே))).மோடி என்ன இனி இந்திய  மாநில எதிர்கால  முதல்வர் கூட வீடுச்சாவி கொடுக்க இலங்கைவரும்போது )) எதிர்ப்பு ஆர்பாட்டம் பற்றி எதுவும்  பேசாமல் போகலாம்))!மல்லி ஆயுள்வேத வைத்தியத்தில் கூட அதிக முக்கியத்துவம் பெறுகின்றது  இலங்கைப்பொருட்களை தடைசெய்ய வேண்டும் /புறக்கணிக்க வேண்டும் என்று புலம்பெயர்தேசத்தில் பொங்கும் போராட்டக்காரர்கள் கூட சமஹன் குடித்துக்கொண்டே தொண்டையைச் சீர் செய்வார்கள். சமஹனின் மூலப்பொருளே மல்லியும்  இத்தியாதி மூலிகைகளும் தான்!  சினேஹா நடித்த ஆனந்தம் படத்தில் ஒரு நகைச்சுவை ஞாபகம் இருக்கா உங்கள் பலருக்கு பருப்பு கடிதம்))

 என்ன மல்லி பற்றி புலம்புகின்றேன் என்று சிந்திக்கின்றீர்களா உறவுகளே?)))


இன்று உடல் நலமில்லை உடனே  வாங்கோ மருந்து எடுக்க  என்று மனைவி கூட்டிச்சென்றது ஆங்கில வைத்தியரிடம் அவர் என்னைப் பரிசோதிக்க முன் மனைவியின் கழுத்தினைப் பார்த்தார் ))) எவ்வளவு பணம் ஆட்டையப்போடலாம் என்ற நினைப்பில்  )))

உள்  மனதில் தோன்றியது அதிகம் பீஸ்க்கட்டும் நிலமை என்று மாறும்?))) ஆயுள்வேத மூலிகைகள் நிறைந்த நாட்டில் கூட ஆங்கில வைத்தியம் பெருகிவிட்டது பணம்கொழிக்கும் தொழில் அல்லவா இதை சீர்செய்ய ஏதுவழி?

இந்த நிலையில் இலங்கையில்  கனவு கண்டாள் எப்படி இருக்கும் ?))
-----////


------------------------------------


கண்டகண்ட தெரியாத மருந்து வாங்கி
ஏன் கொடுப்பான் காசு ,காசு,
காசு ,காசு ,காசு !

எல்லா நோயும் தீரும் உடன் குடிப்போம்  !கொத்தம்மல்லித் தண்ணீர்
 எதிர்கால ஆரோக்கியம் என்றும் நிரந்தரம்!!
ருமேனியாவில் இருக்கு தூய்மையான கொத்தமல்லி
  இலங்கைக்கு கொண்டுவருவது
நம்ம( எங்களின் ) ஹமால் தம்பி!
குடிப்போமா கொத்தமல்லி .!
ஏன் பிஸ்க்கி ?பிரண்டி?
 ஏன் பிஸ்க்கி ?பிரண்டி ?

குடிப்போமா கொத்த மல்லி
,கொத்தமல்லி !
எல்லா நோயுக்கும் துரித நிவாரனி மல்லித்தண்ணி !

இன்னும் எனக்கு(எங்களுக்கு) நினைவுண்டு !
என் சிறுபராயத்தில், எனக்கு ஏதும் வியாதி என்றால்!
என் அம்மா தந்தது உடனடியாக மல்லித்தண்ணி!
 .அப்போது சுகப்படுத்தியது மல்லித்தண்ணீர் தானே?


எல்லா நோயுக்கும் துரித நிவாரனி  குடிப்போமா கொத்தமல்லித்தண்ணீர்}
கொத்தமல்லி தம்பி !
கொத்த மல்லி . -!!வீதிப்பாடகர்களுக்கும் ,விற்பனைப்பிரதிநிதிகளுக்கும்  ,உடல் உழைப்பு தொழிலாளிக்கும்  புத்துணர்ச்சி தருவது
கொத்தமல்லித்தண்ணி !

உடல் இளைக்க வேண்டி உடல்ப்பயிற்ச்சி போனாலும்,
 உருபடியான உடன் மருந்து
கொத்தமல்லித்தண்ணீர் அதே கெதி தண்ணீர்தான்))


அது போல இது போல எதுவும் வேண்டாம்!
குழந்தை போல இருப்பாய் குடித்துப்பாரு!
 கொத்தமல்லி தம்பி குடித்துப்பாரு கொத்தமல்லி .கொத்தமல்லி !

காலையிலும் ,மாலையிலும் தினமும் குடிப்பேன்
உடல்பலமும் ,மனபலமும் இன்னும்
பளபளப்பாய் இருப்பதெல்லாம் கொத்தமல்லித்தண்ணி குடிப்பதால்
பளுக்கூட தூசுதான் பாரு தூக்கி))!

எல்லோரும் குடிப்போமா கொத்தமல்லி ஏன் பிஸ்க்கி பிராண்டி?/
ஏன் பிஸ்க்கி பிரண்டி ?

மறக்காமல் குடியுங்கள் கொத்தமல்லித்தண்ணீர் ))))

குளீர்பாணமும் வேண்டாம்,
ஐஸ்கிரீமும் வேண்டாம், குடிப்போமே
குளிர் அறை குத்தாட்ட சந்திப்பில் கூட
தம்பி ஊத்திக்கொடு   கொத்தமல்லித்தண்ணீர்)))!

இதோ இப்போது குடிநீர் போத்தலிலும் கொத்தமல்லி தண்ணீர் வந்துவிட்டது 
கொத்த மல்லி சிரிப்பு )))

---
மூலப்பாடல் ஆக்கம்-சந்திரதாச பெர்ணண்டோ

 இசைமீட்டி பாடியவர்கள் இருவர்  -சுனில் பெரேரா /பியால் பெரேரா


முகநூலில் பாடல் பகிர்ந்து உங்கள் சகோதரமொழி சிங்களமொழியின் தமிழ்வடிவம் எப்படி இருக்கு என்று அறிய ஆவல் என்று பதிவு எழுதத்தூண்டிய யாழ் இணைய பதிவர்  நட்பு  சுண்டலுக்கு நன்றிகள்..


  என் சிற்றறிவு  சிந்தித்த குத்தாட்டா வரிகளே  மேலே )))

மூலவடிவம் காட்சியில் காணுங்கள் )))
இலங்கையின் பிரபல்ய இசைக்குழுக்களில் ஜிப்சி இசைக்குழுவும் ஒன்று என் அபிமான பாடகர்களில் சுனிலும் ஒருவர்!


7 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

விரைவில் பூரண உடல் நலம் பெற வாழ்த்துக்கள் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

பாட்டு அசத்தல்...

Angelin said...

கொத்தமல்லியில் இவ்வளவு நன்மைகளா !! நானும் தொட்டியில் சம்மருக்கு வளர்ப்பேன் ..இங்கே ஐந்து கட்டு ஒரு பவுண்டுக்கு கிடைக்கும் ..மலிவா கிடைக்கும் நாளில் தொக்கு ஜூஸ் சட்னி சாதம் என டிசைனாக வளம் வரும் கொத்தமல்லி :)
get well soon

mohamed althaf said...

அருமையன பதிவு

asha bhosle athira said...

ஆஹா என்ன இன்று ஒரே கொத்தமல்லிப் புலம்பலாக இருக்கே என நினைச்சேன்ன்.. காச்சலோ நேசன்?.. கொத்தமல்லியுடன் நற்சீரகம் சேர்த்து அவிச்சு இரவு பகல் நிறையக் குடியுங்கோ.. எல்லாம் பறந்திடும்.. அதிகம் தண்ணி குடியுங்கோ.. இப்போதுள்ள காலநிலைக்கு எல்லோருக்கும் வருத்தம் வருகிறது, முக்கியமா குழந்தைகளுக்கும் இங்கு பரவலாக சிக்கின் பொக்ஸ் உலாவுகிறது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கொத்தமல்லியின் மகத்துவத்தை விளக்கியது அருமை.சாம்பார் ,ரசம் இரண்டுமே கொத்தமல்லி இல்லை என்றால் சுவை இல்லை.கொத்தமல்லி துவையலின் ருசியே தனி.

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் நேசன் கொத்தமல்லி, ஜீரகம் இரண்டுமே எங்கள் தேசத்தில் - கேரளத்தில் பயன்பாட்டில் உண்டு. கொத்தமல்லி காப்பி கூட உண்டு. நல்லாருக்கும். இப்போ நல்லாருக்கீங்களா சரியாப் போச்சா..?!!

//இன்று உடல் நலமில்லை உடனே வாங்கோ மருந்து எடுக்க என்று மனைவி கூட்டிச்சென்றது ஆங்கில வைத்தியரிடம் அவர் என்னைப் பரிசோதிக்க முன் மனைவியின் கழுத்தினைப் பார்த்தார் ))) எவ்வளவு பணம் ஆட்டையப்போடலாம் என்ற நினைப்பில் )))// ஹஹஹஹஹ் உண்மைதான் ரசித்தோம் இவ்வரிகளை...