12 June 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்- 6

முன்னர் இங்கே---http://www.thanimaram.com/2017/05/5.html


சில நேரங்களில் விரும்பிய  சிலரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு நம்மைத்தேடி வராதா என்று மனசு ஏங்கும்சொல்லவா சொல்லவா ஒரு காதல் பாடல் போல .

சிலநேரத்தில் பிடிக்காதவர்களிடம் இருந்து வரும் உள் அழைப்பு  மாத இறுதியில் வட்டிக்கு கொடுத்தவன் எப்ப  வட்டிக்காசு எடுக்கலாம் என்று  அழைப்பது போல  பதட்டமானதாக இருக்கும் .

அதைவிட விளம்பரங்களின் தொலைபேசி அழைப்பு என்பது எப்படா தொலையும் இந்தச்சனியன் என்று மனசு புலம்பும்  .


 இது ஒரு பக்கம் என்றால் இனவாத நாட்டில் தொலைபேசி ஊடாக  இலங்கை வர்த்தகர்களிடம் கப்பம்கோரி அவர்களின் வாரிசுகளை கொலைசெய்த  கதைகள் எல்லாம் பொதுவெளியில் இலக்கியம் பதிவு செய்யவில்லை என்பதும் இலங்கையின் இன்னொரு முகம் என்பதை மறந்துவிட்டார்கள்  விருதுக்கு இலக்கியம்  படைக்கும் நவீனபடைப்பாளிகள். இது மட்டுமா தொலைபேசிப்பரிவர்த்தனை இணைப்பு வழங்குவதில் கூட ஊழல் புரிந்த இலங்கை அரசநிறுவாகம் பற்றி  யாரும் பேசுவதில்லை  .


பேசினாலும் அடங்கிப்போன ஊடகம் எல்லாம் இங்குண்டு


இந்த கதை எல்லாம் இப்ப ஏன் நினைவில் வருகின்றது என்றால் ?

தெரியாத புதிய இலக்கத்தில் இருந்து வரும்  புதிய அழைப்புக்களை உடனடியாக  வானொலி நேரடி பாடல் நிகழ்சி போல உள்வாங்குபவன் அல்ல யாழவன்.காரணம் அதிகம் தேவையற்ற பிரச்சனைகளை அனுபவதித்தவன் என்றபடியால் . !


கடந்த சில நாட்களாக தாய்த்தேசத்தில் இருந்து தொடந்ந்து ஒரு அழைப்பு அவன் கைபேசிக்கு வந்த வண்ணம் இருந்தது .சில நேரங்களில் தொடந்து இடைவிடாத பாராளமன்ற கூச்சல் போல இருக்கும் தொழில்நிலையத்தில்  இருக்கும் போது.


ஓய்வில் இல்லம் வரும் போது தொட்டல் சினுங்கிபோல மின்னி மின்னி விரிந்து நிற்கும் கைபேசி!அதையும் அசட்டை செய்யாது இருந்த போதும் யாராக இருக்கும் என்ற தேடல் அவனிடம் இருந்தது .


ஒரு சில நாளின் பின்  தொடர்து வந்த அந்த விடாது கருப்பு அழைப்பினை உள்வாங்கிய போது !

எதிர்முனையில் பேசிய குரல் என்ன யாழவன் அண்ணா ?அமெரிக்காவில் இருக்கும் ரணிலைக்கூட உடனடியாக தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கின்றார் முன்னால் ஜனாதிபதி !

உங்களிடன் பேச நினைத்தால்  ஒரு வாரமாக அழைப்பினை உள்வாங்கவில்லையே ?ஏன் இப்படி மாறிப்போயிட்டீங்க? வெளிநாடு போனபின் திடீர் அதிக பணம் மாற்றிவிட்டதோ உங்களையும் ?
என்ற அவனின் கேள்விக்கு  பதில் கொடுக்க முன்னர் !

ஆமா நீங்க யார் என்று தெரியலயே தம்பி ?என்றான் மென்மையாக எதிர்முனையில் கோபத்துடன் இருப்பது யார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் .

என்னைத்தெரியலயா அண்ணா ?என் கைபேசியில் முகம் பார்க்கும் கருவி இல்லையே !

உங்க நக்கல் இன்னும் குறையல ! தம்பி படையப்பாவில் நடித்தோர் கூட  இன்னும் லேஜண்ட்தான்)))

என் குரல்கூடவா நினைவில் இல்லை ?

என்னதம்பி பகிடிவிடுகின்றாய் குரலில் கண்டுபிடிக்க நான் என்ன பாட்டுக்கு  குரல் தந்த குயில் நிகழ்ச்சியா செய்கின்றேன் ?
அதுசரி நீங்கள் அது எல்லாம் மறந்து ,பறந்து போனவர்தானே ! உங்க வரலாற்றை  எல்லாம் தனிமரம் சினிமாவில் கவர்சி போல தொடரில் தொட்டு சென்று இருக்கலாம்!
 ஆனால் நிஜம் பல எனக்கும் தெரியும்)))


தம்பி எனக்கு   இப்ப அதிக வேலை இருக்கு .நீங்க யார் ?என்று கண்டுபிடிக்க முடியவில்லை .


ஏன் முகநூலில் முத்து எடுக்கபோறீர்களா? இல்லை டிவிட்டரில் கும்மியடிக்கப்போறீங்களா  ?இல்லை உங்க நட்பு தனிமரத்துடன் அடுத்த தொடர் பற்றி விவாதிக்கப்போறீங்களா வெட்டியாக ?என்றுவிட்டு  யாழவனின் அடுத்த பதிலுக்கு இடைவெளிவிட்டான் .

தம்பி நீங்க தவறான இலக்கத்துக்கு அழைத்துவிட்டீர்கள் போல மன்னிக்கவும் தொடர்பை துண்டிக்கப்போறன் என்ற அங்குசத்தை வீசினான் யாழவன் !

அப்போதுதான் அண்ணா ஒரு நிமிடம் நான் .....


தொடரும்...

8 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

அழைத்தவர் யார் என்று அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

யார் அது...>?

Rajeevan Ramalingam said...

யார் பாஸ் அது கோல் எடுத்து அலுப்படிக்கிறது. சொல்லுங்க ஆள தூக்குவம் :)

mohamed althaf said...

யார் அவன்

asha bhosle athira said...

இம்முறை நேசனின் பதிவு மிக வித்தியாசமாக இருக்கிறது.. ஸ்நேகாவைக் காணவில்லை.. அதனால்தான் பதிவு நன்றாக இருக்கிறதோ?:) ஹா ஹா ஹா..

நேசன் உங்கள் கொமெண்ட் செட்டிங்கை மாத்தி விடுங்கோ. இது கொமெண்ட் பொக்ஸ் ஓபின் ஆனதும் போஸ்ட் பேஜ் மறைந்து விடுகிறது.. அப்படி எனில் பார்த்துப் பார்த்துக் கொமெண்ட் போடுவது கஸ்டமாக இருக்குது.

asha bhosle athira said...

//
சில நேரங்களில் விரும்பிய சிலரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு நம்மைத்தேடி வராதா என்று மனசு ஏங்கும்?//


///சிலநேரத்தில் பிடிக்காதவர்களிடம் இருந்து வரும் உள் அழைப்பு மாத இறுதியில் வட்டிக்கு கொடுத்தவன் எப்ப வட்டிக்காசு எடுக்கலாம் என்று அழைப்பது போல பதட்டமானதாக இருக்கும் .////

ஆஹா... அழகாகச் சொல்லிட்டீங்க இரண்டும் அருமையான வசனங்கள்... முதலாவது ஸ்நேகா.. 2 வது ஆரூஊஊ?:)

Angelin said...

யாழவனை அழைத்தது யாராவர் ??
நானெல்லாம் புதிய எண்கள் என்றால் ரிஸீவ் செய்ய மாட்டேன் ..அவரகள் இலக்கத்தை மாத்தியிருப்பின் டெக்ஸ்ட் மெசேஜில் சொல்லணும் :)

வலிப்போக்கன் said...

சொல்லிய விதம் அருமை