25 July 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-10


முன்னர் இங்கே-   ---http://www.thanimaram.com/2017/07/9.html

இரட்சிப்பது, இரட்சனை, ஆட்கொள்வது தேவதூதன், தேவாமீர்தம் போல என்ற பதம் எல்லாம் எத்தனை அழகானது தமிழில் என்பதை சிந்தித்தால் மனதில் ஒருவகை மகிழ்ச்சிக்களிப்பு தானாகவே திறந்து கொள்ளும் மலையகத்தின் நீர்வீழ்ச்சி போல !

அப்படித்தான் இலங்கையின் ஆட்சி மாற்றங்கள்  என மலர்ந்த பிரேமதாச ஆட்சி , சந்திரிக்கா ஆட்சிரணில் அரசின். சமாதான ஒப்பந்த காலம் எல்லாம் தமிழ்மக்களின் மனங்களில் ஒருவித சந்தோஷ பரவசம் தோன்றியது ஆரம்பத்தில் !

ஆனால் ஆட்கொள்ள வந்தவர்களே அட்டுழியம் புரிந்த கதைகள் எல்லாம் இலக்கியம் வரலாற்றிப் பதிவாக எழுத வேண்டும் .

அது போலவே சமாதான காலத்தில் நேர்வேயின் செயல்பாடுகள் வடக்கில் மட்டுமல்லாது  தெற்கு நோக்கியும் பல அபிவிருத்தி செயல்பாட்டுக்கு நிதிப்பாதீட்டை கையாளத்தொடங்கியது  நேர்வே அரசு!

மீண்டும் மறுமலர்ச்சி கால இலக்கியம் போலவே கொழும்பு மட்டுமல்ல அப்புத்தளை, பண்டாரவளை,பதுளை என வியாபார உலகும் புத்தொளி வீசத்தொடங்கியது. மூடிய பாதைகள் மீண்டும் திறக்கும் போது வடக்கே தெற்கின் சவக்காரம் போலவும் தெற்கே வடக்கின் புகையிலை போலவும்  தடைப்பட்ட பொருட்கள் எல்லாம் தட்டுப்பாடு இல்லாது  கிடைக்கத்தொடங்கியது போலவே புலம்பெயர்ந்த உறவுகளும் மீண்டும் நேரில் சந்திக்கும் ஒரு கும்மமேளா நிகழ்ச்சி போல உறவுகளின் வருகை கொண்டாடத் தொடங்கியது ஒருபுறம் என்றால் !


மறுபுறம் தனியார்துறை விற்பனை நிறுவனங்களிலும் புதிய முகாமைத்துவ தலைமை மாற்றங்கள்  தம் விற்பனைத்துறையில் ஏற்றப்பட இனவாத தேக்கநிலையை  தளர்த்தியது இலங்கை இராணுவத்தைப்போல வியாபாரத்தை மீளக்கட்டி எழுப்ப !

சிங்களவர்களிடம் இருந்த ஏகவினியோகஸ்த்தர். என்ற ஆட்சியை கைமாற்றியது சந்திரிக்காவின் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் தோல்வியுற்ற  பொருளாதாரம் ரணிலின் பாராளுமன்ற வெற்றி அரசியலில் புதுவேகம்(2002 ) கொண்டது  போலவே  பல இடங்களில் ஏக வினியோகஸ்த்தர்களாக மீண்டும் தமிழரிடம் பகிர்ந்த போது புதிய பல விற்பனைபிரதிநிதிகளையும் உள்வாங்கியது பல்தேசிய நிறுவனங்கள்

அது போலவே விற்பனையை அதிகரிக்க தேர்ச்சி மிக்க விற்பனைப்பிரதிநிதிகளையும் கொழும்பில் இருந்து மலையகம் நோக்கி இடமாற்றம் செய்து தம் இலாபநோக்கத்தின் செயல்திறனை விஸ்தரிக்க பல நிறுவனங்கள்  புதுவழி தேடியது.//


 வடக்கினைப்போலவே தெற்கிலும் விற்பனைப் போட்டியுண்டானது பல விற்பனைப்பிரதிநிதிகளிடம் 

. இந்த காலகட்டத்தில் தான் தவராஜாவுக்கு மீண்டும் வசந்தம் போல ஏகவினியோகஸ்தர் உரிமம் கிடைத்தது. பல நிறுவனங்களை தன் அனுபவத்தில் பார்த்தவர் என்பதால் யுத்தநிலையிலும் தன்னோடு இயங்கிய பிரபல்ய நூடுல்ஸ் தயாரிப்புபின் சந்தைப்படுத்தலுடன்,(harichandra ) ! புதிதாக பல்தேசிய  கம்பனியின் அத்தியாவசிய/ஆடம்பர நிறுவனத்தின் ஏகவினியோகஸ்த்தர் என்ற சில நிறுவனங்களின் கடைதிறப்புக்கு கைகொடுத்தார் .


அதுவரை சிங்கள இளையர்களின் வசம் இருந்த விற்பனைப்பிரதிநிதி  என்ற மகுடம் பாரதிராஜா சினிமாவில் அறிமுகம்செய்த நிஜமான கிராமங்கள் போல வடகிழக்கு இளையர்களும் புதிய சினிமா நாயகர்கள்  போல  ஆங்கிலத்துடன் ,தமிழும் ,சிங்களமும் பேசும் தனித்துவத்துடன் டாக்டரும் ,என்ஜினியரும் மட்டும் தான் தொழில் அல்ல இந்த விற்பனைய்துறையிலும் சாதிக்கலாம் என்ற உத்வேகத்துடன்  புத்தம் புதுப்பயணம் பட கதாநாயகர்கள் போல மலையகம் நோக்கி வந்தார்கள்!

 வந்தவர்களில் காதல் கடிதம் தீட்டியோரும், ஊருவிட்டு ஊர் வந்து காதல் மழையில் நனைந்தவர்களும்,பூந்தளிர் ஆட , மலையோரம் குயில்கூவக்கேட்டேன்மறக்கக்தெரியவில்லை  என் காதலை, ஒரு கடிதம் எழுதினேன் என்று பாடியவர்கள் கதை எல்லாம் உதவுகங்கரங்கள் போல உதவிய கதைகள்  என்றாவது  இன்றைய இணையத்தில் பேசலாம்!மலையகத்தின் சாதிய குறுக்கு வெட்டு  பற்றி யாழ்மேட்டுக்குடி எல்லாம் அறியாத கதை எல்லாம் )) பெரியகவுண்டர் பொண்ணு படப்பாடல் போல ) சுதந்திரமாக என காத்திருப்போர் பலர்!

அன்றைய மலையக பண்பலையில் ஒலித்த பாடல்கள் போல இன்று காசுகொடுத்துக்கூவி அழைக்கும் வானலை முதல்வன்கள்  பண்பலையைப்பார்க்கும் போது  !
 நினைவுகள் வைகாசி பிறந்தாச்சு பட நாயகி காவேரி போல அல்ல உன்னை நினைத்து பட  சினேஹா போல   புலம் பெயர் தேசம் பாரிசில் இருந்து விடுமுறையில்  இலங்கையின் அழகிய நகரம் அப்புத்தளை வந்தாள்  விழிகளில் வந்திடு கண்ணே என்பது போல கமலேசின் மச்சாள் தவராசாவின்  தங்கை  மாதவியின் மகள் சாருமதி !


தொடரும் ....

5 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தொடருங்கள் நண்பரே
காத்திருக்கிறேன்

putthan said...

தொடருங்கள் நேசன் ...நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா!! ஹீரோயின் என்ட்ரியா!! இனிதான் சூடு பிடிக்குமோ..அது சரி விற்பனைப் பிரதிநிதியாக மலையகத்துக்கு வந்து வாலிபர்கள் காதல் செய்தால் "ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் செய்யாதீங்க நு பாடலையோ??!!! ஹஹஹ்

தொடர்கிறோம் நேசன்!

தனிமரம் said...

மலையகத்தில் பிரதேசவாதம் அதிகம் கிளரப்படும் காதலின் போது .விரிவாக தனிப்பதிவில் பேசுவோம் துளசிதரன் சார்!

Asokan Kuppusamy said...

வாழ்த்துக்கள் வெற்றி கிட்டட்டும்