25 September 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-16

http://www.thanimaram.com/2017/09/15.html


--------------------------
இலங்கையின் ஆட்சியாளர்களும் அரச செயல்பாட்டாளர்களுக்கும் பின் கதவு வாசல் போல செயல்படும் இலங்கையின் மத ஆதிக்கம் என்பது ஒரு இனவாத கட்டமைப்பின் இன்னொரு கோரப்பற்கள்.இலங்கையில் இருப்பது தேரவாத பெளத்தம்! பெளத்தத்தில் முதன்மையானது மகாயான பெளத்தம். பாலி மொழி மூலதுக்கும்,சிங்களமொழி  மகாவம்சத்துக்கும் இடையில் குளறு படிகள் அதிகம்.

 உயர்  பெளத்தபீடம் இந்த மதவெறி இனிவெறி தாண்டி எப்போதும் வெளிவந்ததில்லை


இன்றுவரை நிகழும் எந்த இனவாத செயல்களுக்கு  எதிராக  கண்டனம், எதிர்ப்புணர்வு எதையும் இந்த அஹிம்சை மூர்த்திகள் இதுவரை இலங்கையில் பதிவு செய்ததில்லை

 ஆனால் அரசியல்த்தீர்வு  என்ற வெற்றுக்கோஷம்  பொதுவெளியில் ஓங்கி  ஒலிக்கும் போதெல்லாம் புத்தனின் போதனையான இரந்து கேட்கும் யாசகம் போல பிச்சைப்பாத்திரம் ஏந்துவதைவிட,   அரசியல் ஆளுமையை நிறைவேற்ற வீதிகளில் கூலிச் சண்டியர்கள்  போலவும் இனத்தீக்கு இன்னுயிர்கொடையாக   வெற்றுடம்பில் தீ மூட்டி ஆடும் நாடகம்  பண்டாராயநாயக்க காலம் முதல் இன்றைய C.V. விக்னேஸ்வரன் சந்திப்பு வரை மகநாயக்க அஸ்கிரியபீடம் தன்னை என்றும் மறுசீரமைப்பு செய்ததில்லை !


எத்தனை உடல்கள் போரின் யுத்த தோல்வியாக தெற்கு நோக்கி  பெட்டிகளில் பினம்  போல  வந்தாலும் !


போர் முனைக்கு போ என்று இனவாத கண்ணோட்டத்தில் உடல்களை சிதை ,உன் ஆண்மை வீரத்தை நிருபித்துக்கொள் என்று கொம்பு சீவி, நூல் ஓதி விட்டவர்களுக்கு தசதரன் போல புத்திரசோகம் ,புத்திரி சோகம் புரியாத ஓழுக்க சீலர்கள்/மனுதர்மம்  என்று மார்தட்டிக்கொள்வது   ஊடகத்தில் ஒரு புறம் என்றால் !  


இலங்கையின் நீதித்துறையும் அது போலவே என்றும் மதவாத  எதிர்ச்செயல்களுக்கு எந்த உடனடித் தீர்வையும் விரைந்து கொடுத்து அரசியல் பண்பாட்டு ஜனநாயகத்தை காப்பாற்றியதில்லை  !

நீதி அமைச்சர் எப்போதும் மதவாதிகளின் செல்லப்பிள்ளையாகவே இருந்து வந்து இருப்பது இலங்கையின் துன்பியல் வரலாறு !


எத்த உயர் உச்சி நீதிமன்றங்களும் இதுவரை தமிழ் மக்களின் துயர்களை நடுநிலையில் நோக்கியதில்லை! காணமல் போனோர் விடயம் வரை.இலங்கையின் ஆட்சிபீடம் கண்ணுக்கொட்டிய தூரம் வரை இனவெறியில் இருந்து விடுபடும் சூழல் தற்போதும் இல்லைவெளிநாட்டில் உயர் கல்வி பயில ஏழை மாணவர்களுக்கு மகா பொல புலமைப்பரிசுக்கு அடுத்த படியாக, புத்த மதத்துறவிகளுக்கு  இலங்கையின் புத்தசாசன அமைச்சின் ஊடாகவும் அரச ஊக்க  நிதிகள் வழங்கப்படுகின்றது

இந்த நிதிகள் மூலம் உயர்கல்வி என்ற போர்வையில் நாட்டைவிட்டு வெளியேறிய பல துறவிகள் தாய்த்தேசம் திரும்பி வந்ததில்லை வைத்தியர்கள் போலவே  தர்மபோதனையை பரப்ப ஆச்சிரம்மம் நிறுவி அடைக்கலம் தேடிவிட்டார் என்று அமைச்சின். செயலார்கள் குறிப்பு எழுதி வைத்துவிட்டு பணி ஓய்வு பொற்றவர்கள் சிலர்.


 இலங்கை நாணயம் வெளிநாட்டில் நிதி உதவி என்று யார் யாருக்கோ  கொடுப்பட்டது என்றதன் கோர்வையின் பின் பல நிதி மோசடி செய்யப்படுவதும்  தொடர்நிகழ்வுகள்.

 சில புத்ததுறவிகள் வெளிநாட்டில் காணமல் போவது என்பது அவர்களள் விரும்பியே மதத்துறவி என்ற பிரமச்சாரிய  ஆடையை அவிழ்த்து சாமானிய மனிதர்கள் போல சம்சார சமுகத்தில் இணைந்துகொள்வதும் ஒன்றும் இராணுவ இரகசியம் அல்ல!

 சிலர் இல்லறத்தில் இணைந்து இருப்பது திபேத் நாட்டின் புத்த பிக்குகளாக   இருந்துவிட்டு  அடைக்கலம் கோருவோர்கள் திருமணம் செய்வதன் ஊடாக சேர்து வாழக் கிடைக்கும் நிரந்தரவதிவிட உரிமை போலத்தான் இந்த ஐரோப்பிய தேசங்களில் நிகழும் இயற்க்கை  மாற்றம்

இந்த வகையில் இலங்கையில் இருந்து  உயர்கல்வி விசாவில் வந்து லித்துனியாவில் மாணவர்களாக இருந்தவர்கள்   சிலர் தங்களின் விசா முடிவடைய நெருங்கும்  நாட்களில் கல்வியை இடைநிறுத்தி விட்டு அருகில் இருக்கும் ஐரோப்பிய தேசங்களுக்கு அடைக்கலம் தேடிவிடுவார்கள் புதிய பெயர்களில்  புதிய வாழ்வாதாரங்களை பெருக்கிக்கொள்ள பைவ் ஸ்டார் படம் போல அதனால் தான் பின்வந்த நாட்களில் கைரேகை அடையாளம் என்பது உயர்கல்வி கற்க செல்வோருக்கு மிகமுக்கிய ஆவனமாக உள்நுழைக்கப்பட்டது!

 இலங்கையின் மாணவர்களின் இந்த பின்புறச்செயல்பாட்டில் சொல்லாத ஐரோப்பிய விசாரணக்கு இலங்கை அரசு முகம் கொடுக்க விரும்பாத ரகசியம் என்ன என்பதை  ஆய்வு செய்வது போல வந்தவர் அசங்க ரத்னாயக்கதன் புலனாய்வு என்ற  எழுதப்படாத சட்டங்கள் படம் போல    மாணவர்களிடம் விசாரணையை முன்னெடுத்தார் இங்கே நடப்பது என்ன ?மாணவர்கள், மாணவிகளின் பாதுகாப்புக்கு  எங்கிருந்து  பங்கம் வருகின்றது  ?பின்னிருக்கும் மன்மதன் அன்பு படப்பாடல் போல. கல்வீசும் அம்புகள் யார்?


சொல்லத் தயங்காதீர்கள்  நம் தேச சொத்துக்களே !என்னால் முடிந்த அரச உதவியை  நிச்சயம் பெற்றுத்தரக் காத்து இருக்கும் ஜெமினி பட பொலீஸ் அதிகாரி வேணுகோபால் போல மாணவர்களிடம் பேசினார் .

பொதுவில் சொல்லத் தயங்கினால்,உயிர் அச்சம் எனில்  தனிமையில் என் காரியாலத்தில் வந்து சொல்லுங்கள் என்று பீடிகை போட்ட போது தான் கமலேஸ் உடன் வந்த சன்பிக்க, !

கமலேஸ் பெறுமையாக இரு தவளை போல தன்வாயால்  கொடாதே   என்பதையும் தாண்டி  இந்த வன்முறையின் பின் இருக்கும்  குரங்குப் பொம்மை படம் போல  இன்னொரு  கடத்தல் உலகம் எப்படி என்பதை அசங்க ரத்னாயக்கவிடம் எடுத்து இயம்பினான்! திரட்டியில் மைன்ஸ் ஓட்டு ஒருவரே பொறாமைத்தீயில் போலிப்பெயர்களில்  குத்துவதன்  தொழில் நுட்ப இரகசியம் பொதுவெளியில் முகநூலில்  அம்பலம் ஆகுவது போல..... வியப்பாக பார்த்தார் அசங்க ரத்னாயக்க!


தொடரும்!


6 comments :

Thulasidharan V Thillaiakathu said...

இலங்கை நிகழ்வுகளை, அரசியல் போலிகளைச் சொல்லி வரும் வேளையில் அட சந்தடிச் சாக்கில் மைனஸ் ஓட்டையும் இணைத்துச் சொல்லிவிட்டீர்கள் போல! தனிமரம் எப்படி இப்படி அழகாக எல்லா நிகழ்வுகளையும் கோர்த்துப் பின்னிப் பிணைத்துக் கொணர்கின்றீர்கள்!!

தொடர்கிறோம்...கமலேஸ் அடுத்து என்ன சொல்லப் போகிறார்??!!!

Asokan Kuppusamy said...

பகிர்வு அருமையாக உள்ளது பாராட்டுகள்

athira said...

பெயர்தான் விம்மல்.. ஆனா இடிமுழக்கத்தோடெல்லோ தொடருது தொடர்:), சூப்பர் தொடருங்கோ... நீலவானம் பாடல் நன்றாக இருக்கு.. இதுக்கு முன் பெரிதாக கேட்கவில்லை.

நிஷா said...

அட! இலங்கை அரசியலை அழுத்தமா பதிவு செய்வது போல இருக்கே. தொடருங்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

மத ஆதிக்கம் கொடுமையானது நண்பரே

putthan said...

[quote]நீதி அமைச்சர் எப்போதும் மதவாதிகளின் செல்லப்பிள்ளையாகவே இருந்து வந்து இருப்பது இலங்கையின் துன்பியல் வரலாறு ![quote]
சிறிலங்காவின் எழுதப்படாத விதி அது....அரசியல் தீர்வு என்று வந்தாலே இந்த பிக்குகள் ஆட்டம் தொடங்கிவிடும்...