05 September 2017

பள்ளிக்கூட டீச்சர் பாடும் தடாகம் சினேஹா போல)))

சினிமா என்பது சமூகத்தில் நிலவும் சொல்லப்படாத விடயங்களை, பொதுத்தளத்துக்கு ஊடுகடத்தும் ஒரு ஊடகம் போல எனலாம்.

 ஆனால் வர்த்தக உலகில் இன்று கோடி கோடியாக செலவழித்து எடுக்கும் திரைப்படங்களில் எல்லாம் கதை என்பதோ ?சமூக உணர்வு  என்பதோ பூதக்கண்ணாடி கொண்டு தேடும் நிலையில் தான் இன்றைய சினிமாக்கள் பல விவேகமாக, தெறிக்கின்றது சாமானிய சினிமா ரசிகர்களிடம்

இருந்தாலும்  நல்லவிடயத்தை நிச்சயம் பொதுத்தளத்தில்  காட்சிப்படுத்தும் திறமையும் , பொறுப்பும், உணர்ந்த பலர் இன்றும் புதிய இயக்குனர் பட்டியலில் வளர்ந்து வருவதையும் பாராட்ட வேண்டும்

அந்த வகையில் இணையத்தில் காதல், இணையத்தில் திருட்டு ,முகநூலில் நேரலையில் தற்கொலை, பனாமா பத்திரிக்கையில் பணம் பதுக்கியோர் பட்டியல் என்று எல்லாம் நாளந்தம் ஊடகம் சொல்லும் கதைகள் தான் இங்கே பிக்பாஸ் போல மெச்சப்டும் நிலையில்!

 இணைய வசதி வராத எத்தனையோ கிராமங்கள் இன்னும்  நம்தேசத்தில் இருக்கு என்றால் நம்ப மறுப்போர் பலர்.

 குடிதண்ணீர் கேட்டு போராடிய மக்கள் மீது குழாய்க்குண்டு வீசிய செய்தி எல்லாம் ஒரு நிலைத் தகவலாகத்தான் சிலரின் முகநூலில் முக்கிய கண்டணமாக இருக்கின்றது .

இலங்கை ஆட்சியில்  யுத்தம் என்ற போர்வையில் நடந்த  ஊழல்கள் எதுவும் அறியாத எத்தனையோ  சாமானியர்கள் கிராமத்தில் வாழ்கின்றார்கள் என்றால் !ஆதாரம் தாருங்கள் என்று பல்லிளிக்கும் ஆய்வுக்கட்டுரை எழுதுவோர் எல்லோருக்கும் பக்கத்து கிராமத்தில் இருக்கும் வாழ்வாதார பிரச்சனைகளான  அடிப்படை ,வீட்டுப்பிரச்சனை, சுகாதாரப் பிரச்சனைகள், ஆடையைக்கூட வாங்கமுடியாத ஏழ்மை நிலை, மின்சாரம், தொழில்வாய்ப்பின்மைகல்வித்தேடல் என்பன மட்டுமா ?

கிரிக்கட் மட்டுமே உலகம் என எண்ணும் என்னற்றவர்களுக்கு  நேரடி ஒலி/ஒளிபரப்பைக் கூட மகிழ்ச்சியாய் பார்க்ககூட ஒரு தொலைக்காட்சி பொதுவில் இல்லாத பல வீடுகளும் ,பல கிராமங்களும் இன்றும் நல்லாட்சியில் இருக்கு என்பதை நாம் எத்தனை பேர் அறிவோம் ?


இணையத்தில் தற்கொலை விளையாட்டுக்கு விபரமான குறிப்புக்கள் கொடுக்கும் அறிவிப்பாளர்கள் பலருக்கும் கூட குளவி குத்தி மரணித்துக்கொண்டு இருக்கும் மலையக கிராமத்தவர்களின் அவலத்தை எழுதவோ? காட்டு யாணைகளின் வருகையால் அவதியுறும் சாமானிய மக்களின்  இருப்பிட பிரசனை பற்றி  குறிப்பாக செய்தி பகிரக்கூட மனசு இருப்பதில்லை !ஆனால் மெர்ச்சல்படப் பாடல் பற்றி முழுநேரப்போராளியாக வேஷம் கட்டும் முகநூல் எழுத்தாளர்கள் சிலரையும் தினமும் சிரித்த முகத்துடன் பஸ்சில் கடந்து போகும் நம் தேச நிலை பற்றிய கவலை எனக்கு எப்போதும் உண்டு!


யுத்தம் தின்றது நம் தேசத்தின் வளர்ச்சியை மட்டுமல்ல ,பலரின் வாழ்வாதரக் கனவுகளையும் தான்!


கடல்க்கரைக் கிராமத்தில் பிறந்த பலருக்கு மலைப்பிரதேசம் எப்படி இருக்கும் என்ற தேடல்க்கனவு இருக்கும்! நேரில் பார்க்கும் ஒரு வாய்ப்புகிடைக்காதா என்ற ஆவல் ,அது போல குக்கிராமத்தில் பிறந்த வறிய சிறுவர்களுக்கு கடல்க்கரை எப்படி இருக்கும் ?கடலின் இசை எப்படி இருக்கும்? கடல் அலையில் கால் நணைக்கும் சுகம் பார்வையற்ற மனநிலை உணர்வில் ஊடே புரிந்து கொள்வது  எப்படி?ஹீரோவுக்கு என்றும் வயது இளமை  ஊஞ்சல் ஆடவில்லை))) இங்கே ஹீரோவுக்கு எந்த முகப்பூச்சு எதிர்கால முதல்வர்கனவும் இல்லை சாமானிய பஸ் ஓட்டுனர்)))  ஹீரோயினி கவர்ச்சியில் அறிமுகம் ஆகவேண்டும் தலுக்கி குலுக்கி))) என்ற கட்டாய திணிப்பு ஏதும் இல்லை அதுதான் சிங்கள சினிமா கூட பல வெளிநாட்டு விருதுகள் பெறுகின்றது)))


 இலங்கையின் காலிமுகத்திடல் கடற்கரை இயற்கையின் அழகு ,சுற்றுலாவிற்கு  பிரபல்யம் என்றும். அரசியலும் இந்த மண் கறைபடிந்த வரலாற்றுச்சோகம்!

  ( கோல்பேசின் கரைகளில் பார்க்கும்  காதல்ஜோடிகள் போல பலர் புலம்பெயந்து  பறந்தகதை  இன்னொரு உலகம். )

இலங்கையில் இயல்பில்  கடல் இருப்பதையும் ,கடலைப்பார்க்க ஆசைப்படும் சிறுவர்களின் மனநிலையை எப்படி காட்சிப்படுத்துவது ?

பள்ளிக்கூடங்களில் சுற்றுலாப் பயணங்கள் முன்னெடுத்தாலும்! இலங்கையில் அரசியல்ச்சூழ்நிலையில் சில தலைமுறைக்கு  சீரான கல்விச்சுற்றுலா அமையவில்லை.  1970-/முதல் 2010 வரை!

இப்போதும் கல்விச்சுற்றுலா தொடரும் துன்பியல்பு என்றாலும், அமைதியான யுத்தம் அற்ற பூமியில் சுற்றுலாவிற்கு கொஞ்சம் கதவுகள் திறப்படுகின்றது .

ஆனாலும் இலங்கையில் கல்வியத்துறையில் நிகழும்  தோல்வியுற்ற நிர்வாகச்சீர்கேடும் ,அசமந்தப்போக்கும் ,கல்வியின் வியாபார போக்கும், அரசியல் தலையீடுகளும் ,போதிய வளங்கள் சிறப்பான இடங்களுக்கு பகிரப்பாடாத மத்திய ஆட்சியின் செயல்த்திட்டங்கள் எல்லாம் மாணவ சமூகத்திற்கு ஏமாற்றம் அளிக்கின்றது !

நம்பிக்கை ஊட்டக்கூட்டிய பள்ளிக்கூடம் பட சினேஹா போல ஒரு ஆசிரியை கிராமம் நோக்கி வரமாட்டாவா? பாடும் தடாகம் போல))


வந்தாலும் சினிமா கவர்ச்சி போல வெளியுலக  கலாச்சாரத்தை நேசிக்காமல், பூர்வீக பூமியின் காலாச்சாரத்துடன் பழமையும், புதுமையும் விரும்பிய ஒரு வழிகாட்டும் குரு கிடைத்தால் கடலும் கைகளில் அள்ளும் குளிந்த நிலவு போலத்தான்


சினிமா என்பதைத்தாண்டி சிறப்புடன் சொல்ல வந்த விடயத்தை மிக நேர்த்தியாக சமூகத்துக்கு சொன்னா இயக்குனருக்கு இந்திக பெர்ணாண்டோவின் இயக்கத்திற்கு தனிமரத்தின் வாழ்த்துப்பூக்கள்!  


மொழி புரியாதவர்களுக்கு ஆங்கில காட்சி ஓட்டம் உதவி புரியும் . சிறந்த சர்வதேச விருதுகள் பெற்று இலங்கையில் வெள்ளித்திரையில் 150 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய சிறந்த படம் ! இந்திய இறக்குமதி எதுவும் இவ்வளவு நாட்கள் இலங்கையில் ஆனந்தம் பட பாடல் (சினேஹா )போல பல்லங்குழியில்  விட்டம் பார்தேன் வெற்றி என்று எங்கும் சொல்வேன் இந்த சிங்களப்படத்தினை! நீங்களும் விரும்பினால்  பார்க்க இங்கே - !http://mp3downloads.co/kiri-hawa-ho-gana-pokuna-movie-original-sound-track_2cba399db.html

-------------------------

link-2Ho Gana Pokune | Ho Gana Pokuna Movie | Original Sound Track

2 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே
இதோ இணைப்பிற்குச் செல்கிறேன்

athira said...

ஆஹா சினேகன் மறந்துபோய் இருந்தாலும் நான் விடமாட்டேன்ன்.. சினேகாவை கொண்டுவர வைத்திடுவேனே... பின்ன விரும்பிப்போட்டுக், கை விட்டால்ல்ல் ஸ்னேகாவின் கதி?:)