16 October 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-21

முன்னர் இங்கே-  http://www.thanimaram.com/2017/10/20.html

----------------------------------
ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஊடக அமைச்சின் செயலாளர், அரசாங்க அதிபர், புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர், காணி ஆணையாளர், வீடமைப்பு  நீர்பாசனத்துறை செயலர்,சட்டமா அதிபர், என பலஅரச பணியாளர்களும்  இனவாதம் நெருப்புக்கு  எண்ணெய் என்ற  விஷம் ஊற்றி இனவாத கொள்கைக்கு உரமிட்டவர்களில்  பங்கும் இலங்கையில் அதிகம் எனலாம்


இது பன்முகம்கொண்ட தேசம் அல்ல  இனவாத ஆட்சியில் குடைபிடிக்கும்  புத்தன் தேசம் என்ற கொள்கைக்கு அதிகம் நீர்பாய்ச்சியவர்கள் இவர்களே !காரணம் மொழியால் சிங்களம்! மதத்தால் பெளத்தம் என்ற உடன் பிறந்த இனப்பற்று !


இனவாதக்கொள்கை அதிகாரிகள் பலரிடம் அடிப்படையில் ஒரு இந்தியா போல பெரியண்ணா போன்ற மனப்பாண்மை குடியிருந்த கோயில் படம்  போல பூட்டியசிறை

இதனால் தான் அதிகாரம் அதிகளவில் பகிரமுடியாது  போனது ஒரு முன்னால் ஜானாதிபதியினால் .


எனினும் துணிந்து செயல்பட முன்வரும் அரசியல்வாதிகளையும் இனவாத சேற்றில் தள்ளிவிடுவார்கள் இந்த ஆட்சிநிறுவாகத்தில் குளிர்காயும் நவராத்திரி பட   தருமி போல

இலங்கையின் ஊழல் விசாரணையில் ஒரு சில அதிகாரிகளின் பெயர்கள் தான் இப்போதும் பேசப்படுகின்றது .ஆனால் அவர்களைப்போல பலர்  இந்த தேசத்தின் வளர்ச்சியை சீர்கெடுத்தவர்கள். இனவாத கொள்கை ஊடாக அதிகமாக உள்நாட்டிலும் ,வெளிநாட்டிலும் சொத்துச்சேர்த்தோர் பட்டியல்கள் பனாமா பத்திரிக்கையில் என்றாவது வரலாம்


நீதியான விசாரணை செய்தால் மட்டுமே இலங்கையின் உள்ளக அரசியலில் இவர்களின் திருகுதாளங்கள் எல்லாம் மூட்டைப்பூச்சு போல நிச்சயம் நசுக்க முடியும் .

ஆனால் அது இப்போது ஆட்சியில்  சாத்தியம் இல்லை .ஊடகங்கள் எல்லாம் மெளனித்தும் ,விலைபேசியும் அடக்குமுறையில் இருப்பதால் இங்கே நடக்கும் பல விடயங்கள் சர்வதேசத்துக்கு போய்சேரவில்லை எனலாம்!


என் செய்வது இனவாத உக்கிரமம் இங்கே தலைவிரித்தாடுன்றது! ஊழிக்காலம் என்று ! என்னை யாசித்த வியாபாரத்தை மாற்றாந்தாய்ப்பிள்ளைபோல கைவிட்டு இப்போது நானும் புலம்பெயர்கின்றேன்!

 என்றாவது என் அனுபவ அவலங்களை குறிப்பாக யாரோடாவது நிச்சயம் பகிர்வேன்  என்றாவது ஒரு நாள் . என் நண்பன் கமலேஸ் லித்துனியாவில் இருக்கின்றான் .


அவனுக்கும் தெரியாது நானும் திடீர் என்று புலம்பெயர்வது பற்றிய பின்புறச்சூழல் பாதுக்காப்பு விடயம் ஆனாலும் இது எல்லாம் ஆண்டவன் கட்டளை போல அமைதியாக என்றாவது அசை போடலாம் மாடு மீள் அசைபோடுவது  போல !நன்றி முகம் அறிந்த முன்னால்  விற்பனைப்பிரதிநிதியே! ராகுலே!!எங்களின் வழிகாட்டல் குரு நீதானே   உரிமையில் நினைவுச்சின்னம் பிரபு  போல !

மிஸ்டர்   யாழவன் உங்களைச்சந்தித்து எனக்கு மலேசியாவில் மகிழ்ச்சி  !

நானும் இங்கு இருந்து இந்தியா  போகும் விமானத்தில் பயணிக்க வேண்டும் .

யாழவன் நீங்க இலண்டன் போகும்  விமானத்தில் பயணிக்க வேண்டும் என நினைக்கின்றேன் !ரயில் நிலைய மேடையில் எதிர் எதிர் ரயில்பெட்டியில் ஏறுவது போல !நன்றி யாழவன் நீங்க போகும் பாதை விடிவு தரட்டும் !என்றாவது இந்த முன்னால் அதிகாரியை மலேசியாவில் தாடியோடு வசூல் ராஜா எம்பி எஸ் பட தள்ளுவண்டி கிழவன் போல நீங்கள் சந்தித்தாக எவரிடமும் சொல்லவேண்டாம்


உங்க முகநூல் செல்பி மோகம் எல்லாம் ஒரு இனம் அழிந்த கதை ஏனோ பேசவில்லை காரணம் உங்க நிம்மதி எப்படி முக்கியமோ அப்படித்தான் இந்த இரசியங்களும்!


ஆனாலும் கமலேஸ் பற்றி நீங்கள் நம்பிக்கை கொள்வது மகிழ்ச்சி யாழவன் !உங்களை சந்திக்கவேண்டும் என்று நானும் பிரார்த்திக்கின்றேன் புலம்பெயர் வாழ்வை இன்னொரு சபையில் பேசுவோம்!

அதோ என் விமானம் போகும் விபரம் ரூபவாஹினியில் படம்  போல
 போட்டாச்சு !
தொடரும்...

3 comments :

KILLERGEE Devakottai said...

மேலும் அறிய தொடர்கிறேன் நண்பரே...

Thulasidharan V Thillaiakathu said...

சுவாரஸ்யமாகச் செல்கிறதே!! வசூல்ராஜாவையும் கொண்டுவந்து அசத்தல்...தொடர்கிறோம் நேசன்

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன் நண்பரே
தீப ஒளித் திருநாள்வாழ்த்துக்கள்