11 October 2017

காற்றில் வந்த கவிதைகள்-27

நன்றிகள் தமிழருவி வாணொலி உயிரோசை நிகழ்ச்சிக்கு!

http://www.thanimaram.com/2017/10/26.html

////
எதிர்பார்த்திருப்பேன்!


நல்லாட்சி என்னும் நறுமுகையில்,
நம்விடியல் நாளை மலரும் என்ற 
நம் மென்வலு பட்டுவேட்டிகள்,
நல்லாக கயிறு திரிக்கும் கதைகள் எல்லாம்
நாளைய செய்தி போல,
நளன் வருவான் என்ற 
நம் தமயந்தி நிலை போல,
நம் சந்ததிகள் 
நாளையும் விடுதலை கிடைக்கும்!
நம் அரசியல்கைதிகளுக்கு என்ற
நல்ல செய்தி காதில் விழும்!! 
!நம்பிக்கையாக எதிர்பார்த்திருப்பேன்.
நானும் ஒர் இருட்டறை கைதியாக!
நடக்குமா ?நம் தேசத்தில்!
நகர்கின்ற காலங்கள்நம்பிக்கையற்றதாய்!


-----///

மன்னித்துவிடு!

மலைமகள் நீ ஒரு குணமகள்
மடுவத்தில் சிரித்தோம் 
மழலைகள் போல!
மாலையிடுவேன் என 
மனவுறுதி கொண்டதால்
மலர்ச்சியுடன் சிரித்தாய் மனதைமெல்லச்சிதைத்தாய் ,
மகிழ்ச்சியுடன் கைகோர்த்தாய்
மலையகவீதிகள்  போல 
வலைந்து நெளிந்து 
மலையோரம் குயில் கூவக்கேட்டோம்!
மயக்கும் உடரட்ட ரயிலில்!
மனதில் தோன்றிய  தேர்தல் ஆசையில்
உன் தந்தை .என் மாமானார்
மதில்மேல் பூணையானதில்!
மலையகக்கட்சிகளின் வாக்கு வங்கியில்
மண்விழும் என்ற நம்பிக்கையீனத்தில்.
மன்றாடியும் கேட்காமல் 
முதல்மரியாதை படம் போல
மாமன் மகனுடன்
மாங்கலயக்கோலத்தில் வந்தவளே!
மனதை தேற்றிக்கொள்ளுங்கள் என்று
மடைதிறந்த அருவி போல நீ இட்ட
மரியாதைக்கண்ணீரில் அரசசேவையில் 
மாற்றல் வாங்கி 
மாங்குளம் போனதும்!
மாற்றுக்கட்சியினருடன் 
மல்லுக்கட்டியதில் உன் மாமன்
மரண வழக்கில் 
மகசீன் சிறையில் இருப்பது கேட்டும்,
தாலியோடு தனிமரமாக நீ !


மருகும் நிலை கண்டும்,உன்
மனதை ஆற்றுப்படுத்த 
மனசில் இருந்து  ஒரு வார்த்தையும் உதிர்காத இந்த அத்தை மகன் !


ஆசை மச்சானை மன்னித்துவிடு!
மறந்து போ என்ற உன் முகம் 
மறுபடியும் பார்க்கும்
ஆசையில் !நானும்
மஜ்னு படம் போல ஊர் வந்த நிலையில்
சந்தேக வழக்கில் 
மாவனல்ல சிறையில் 
மருகும் இவன் நிலை 
மறந்துவிட்டார்கள்  பலர்!
மனநலம்குன்றியவன் என்ற 
மருத்துவச் சான்றிதலினால்!
மன்னித்துவிடு
மலையகவீதிகளில் அலைகின்றேன்
மருத்துவம் குணமாக்குமாம்
மனதில் இருக்கும் ஊர்கள் பார்த்தாள்!
மறந்து போன காதலைத்தேடி!

மயக்கத்தில் நானும்!
மன்னிப்புக்கோரி 
மடல் வரைகின்றேன்!
மன்னிப்பாயா?
(யாவும் கற்பனை)
மடுவம்-குழந்தைகள் பராமரிக்கும் இடம் மலையக சொல்வாடை!
{மாவனல்ல-
மாங்குளம் -}இலங்கையில் ஒரு ஊர்
மகசீன்-இலங்கையில் இருக்கும் சிறைச்சாலை

மலையக அரசியல் கட்சிகள் இலங்கையில் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டவை-இலங்கை தொழிலாளர் காங்கிர்ஸ், மலையக மக்கள் முன்னணி , தேசிய தோட்டத்தொழிலாளர் காங்கிரஸ்,மலையக மக்கள் காங்கிரஸ்,மேல்மாகாண மக்கள் முன்னணி ,தேசிய முற்போக்கு முன்னணி , இதைவிட தேர்தல் நேரங்களில் சுயேட்சைக்குழுக்கள் பல ))))

4 comments :

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் நண்பரே...

மன்னிக்கவும் முன்னணி என்பதே சரி.

தனிமரம் said...

நன்றி கில்லர் ஜீ வருகைக்கு. எழுத்துப்பிழையை இல்லம் சென்றதும் திருத்தி விடுகின்றேன் தவறை சுட்டிக்காட்டியதுகுக்கு நன்றிகள் ஜீ!

poovizi said...

வலிகளை சொல்லும் கற்பனை விழிகிடைத்த மகிழ்வையும் பகிரும்

வலிப்போக்கன் said...

அருமை