02 November 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-26

http://www.thanimaram.com/2017/10/blog-post.html


------------------
தேடும் கண்பார்வை தவிக்க என்ற பாடல் போலத்தான், தேடிக்கிடைத்த பொருளைத்தேடி ஓடுவது  இந்த அகன்ற பாரிஸ் தேசத்தில் மிகவும் கொடுமை. எங்கே தேடுவது கமலேஸ் என்ற சாமானிய இலங்கைக் குடிமகன் ஒருவனை ?

அவன் என்னநிலை ஆனான் ?என்று யாரிடம் விசாரிக்கலாம்! முதலில் நல்ல நட்பு வட்டங்களில் அறியலாம்!

 அவர்களுக்கு தெரியாது போனால் அடுத்த கட்ட நடவடிக்கை காவல்துறையிடம் காணவில்லை என்று கண்டுபிடிக்க மனுக்கொடுக்கலாம்.

 அவ்வாறு கொடுப்பதுக்கு இந்த நாட்டுச்சட்டத்தின் பிரகாரம் காணவில்லை என்று தேடும் நபரின் குடும்பத்தினர்/ இரத்த உறவுகள் மட்டுமே உரிய நபரின் புகைப்படத்துடன், அவரின் தனிப்பட்ட விபரக்கோவையுடன் காவல்துறையில் மனுக்கொடுக்கலாம் ஜனாதிபதியிடம் காணமல் போனோர் கொடுத்தது போல !ஆனாலும் விசாரணைகள் இலங்கையில் நடப்பதைவிட இங்கே துரித கதியில் நடக்கும் என்பது மகிழ்ச்சியான விடயம்!


 ஆனால் கமலேஸ் சில மாதங்களாக யாரிடமும் தொடர்பில் இல்லாது இருப்பது கொஞ்சம் நெஞ்சில் ஜில் ஜில் என்பது போல அல்ல மனதில் ஒரு வலி அவனைக் காணவில்லை என்று மனுக்கொடுப்பதுக்கு யார் முன் வருவார்கள்? தெரிந்த சொந்த உறவு என்று?

 தவராஜா அண்ணாவிடம் இதை எப்படி துணிந்து சொல்ல முடியும்

என்ற சிந்தனையில் பயணித்த யாழவனுக்கு தீப்பொறிபோல ஒரு சிறு ஒளி நெஞ்சில் தோன்றியது !

இறுதியாக நாம் சந்தித்த போது நாம்  விற்பனைப்பிரதிநிதி என்ற புதிய பாதையில் நாம் பலர்  பயணிக்க வழிகாட்டிய நம் நட்புக்களில் ஒருவன்  ராகுலுடன் தான் இப்போதும் தொடர்பில் இருப்பதாக சொல்லி இருந்தானே !

ஒருவேளை அவன் இருக்கும் பிரெஞ்சின் அழகிய நகரம்   நீஸ் பகுதிக்கு போய் இருப்பானோ

கமலேஸ்சுக்கும் பிரெஞ்சு வதிவிட விசா இருப்பதால் புதிய இடம், புதிய மக்கள், புத்துணர்வுடன் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்ற எண்ணத்தில் புதிய வியாபாரத்தினை அங்கே தொடங்கியிருப்பானோ

உணவகங்கள் மட்டும் அன்றி சில்லறைக்கடைவியாபாரத்தில் கூட இப்போது நம் சந்ததிகள் இங்கே பலர் முன்னேறிவருகின்றார்கள் பிரெஞ்சின் பல பகுதிகளிலும்


லாச்சப்பல் பக்கம் தேடிய நேரத்தில் சில நிமிட அழைப்பில் ஏதாவது உருப்படியான காரியம் சாதித்து இருக்கலாமே  !இதுதான்  வெண்ணையை கையில்  வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதை போல என் நிலமை

ஆனாலும் ராகுலுக்கும் ,எனக்கும் முரண்பாட்டே இந்த சினிமா அரசியல் தானே  .நல்ல நடிப்பை ரசிப்பதில் தவறில்லை ஆனால் யாருக்கும் அடிமைசாசனம் எழுதிக்கொள்ளாதே ,பால் ஊற்றுவதும் ,கட்டவுட்டுக்கு தீபம் ஏற்றுவது எல்லாம் கோமாளிகளின் செயல் என்பான் அவன். சினிமா பற்றி கதைக்கக் தொடங்கி அது விதண்டாவாதத்தில் தான் எப்போதும்  இறுதியில் முடியும்

அவன் போக்கு உடன்படாத நிலையில் தான் நானும் அவனைப்பிரிந்து  அப்புத்தளைக்கு போனேன் கடந்த காலத்தில்

இப்போது எதுக்கும் உதவி கேட்பதில் என்ன தயக்கம் !அவனுடன் கொழும்பை நன்கு சுற்றியதில் கற்ற அனுப்பவப்பாடங்கள் அதிகம் தானே .இது என்ன மீண்டும் சர்வகட்சி மாநாடு போலவா காலத்தை இழுத்தடிக்க உடனடித்தீர்வு தானே இப்போது தேவை .அதிகாரம் இருந்தும்  விரைந்து தீர்வு கானாத பிரட்ச்சனைகள் தட்டிக்கழிப்பது  தாயகத்தில் நிகழ்கின்ற நிலையில்!

 நம் பிரதான தேடல் கமலேஸ் எங்கே என்பது தானே ?தேவையில்லாமல் அழைப்பினை உள்வாங்கியதால் என் ஓய்வு நேரங்கள் எல்லாம் விறலுக்கு இறைத்த நீர் போல ஆகக்கூடாது. எப்படியும் தவராஜா அண்ணாவுக்கு மகிழ்ச்சியான செய்தி சொல்ல வேண்டும் .


நிலாந்தன் எப்படியும் தந்தையின் நோயினை விரைவில் குணப்படுத்திவிடுவான் தவமாய்த்தவமிருந்து  பட சேரன்  போல சித்தசுவாதீனம்  ஏற்பட்டதுக்கு  முழுமைக்காரணி மகன் மீது கொண்ட அளவற்ற பாசம் தானே!

காரணம் இந்த சாருமதி அவனை புரிந்துகொண்டு காதலை ஏற்றிருந்தால் இத்தனை அலைச்சல் வந்து இருக்காது. என்ன செய்வது புதுப்பணம் தான் எல்லாரையும் பழசை மறக்கவைக்கின்றதுவானத்தைப்போல ராஜூவ் போல என்ற சிந்தனை கலைத்து.


 ராகுலுக்கு அழைப்பினை ஏற்படுத்தினான் மறுமுனையில் இனிமையான அந்தப்பாடல் குறில் இசை மீட்ட!

 ஹலோ சொல்லுங்க யாழவன் செளக்கியமா ?ம்ம்  ! இருக்கின்றேன்!

 அதுசரி முகநூலில் அரசியல் நல்லாவே கலக்கின்றீங்க போல, அந்த நாதாரி தனிமரம் வேற உங்க கூட கூட்டாளியாக இருக்குதே!

 எனக்கு எல்லோரும் நட்புத்தானே நண்பா. என் திண்னையில் கட்டுப்பாடு இல்லையே வருபவர்களை என்றும் அன்புடன் பட மனோகரம்மா போலத்தான் நானும்.


  அதுசரி எனக்கு இந்த சமூகவளைத்தளங்கள் பக்கம் எல்லாம் வர அதிக விருப்பம் இல்லை ஆனாலும் ஒரு பார்வை எப்போதும் பேக் அடியில் வருகின்றேன் ))) 

அது எனக்கும் தெரியும். என் பதிவுகளை எட்டிப்பார்ப்போர்வ்பற்றி அடிக்கடி உள்குக்கு போட்டு இருக்கின்றேன்

அதுசரி என்ன திடீர் பாசம்  எதிர்க்கட்சித்தலைவரை தீபாவளி கொண்டாடத்ததுக்கு அலரிமாளிகைக்கு ஜானாதிபதி அழைத்தது போல என்மீது அழைப்பு எடுத்து இருக்கின்றாய்?

 இல்லை நம்ம கந்தன்ஸ்டோர்ஸ் தவராஜாவின் மகன் கமலேஸ் இங்கே காணவில்லையாம்! நீண்ட மாதங்களாக தகப்பனுக்கு அழைப்பு எடுக்கவில்லையாம்! அவர் இப்ப மூளைதடுமாற்றம் கொண்டவர் போல இருக்கின்றாராம்.

 இங்கே பாரிசில் நானும் விசாரித்தேன் ஆனால் யாரிடம் இருந்தும் உருப்படியான பதில் கிடைக்கல.

 என்னால் முடிந்த கடைசி அடைக்கலம் நீதான் ! அவனைப்பார்த்தாயா


ஏன் இந்த  சினேஹா சேலையில் உருகும் பிரெஞ்சுக்காரி எழுதும் தனிமரம் உதவக்கரைக்கு தெரியாதா யாழவன் எங்கே அவன் என்று ?

தெரிந்து இருந்தால் என் நட்பு சொல்லி இருபானே ?

அவனுக்கு சொல்லு ஆன்மீகத்தை குறைத்து இருக்கும் பொதுக்கடன் எல்லாம் முதலில் தீர்க்கச்சொல்லு!

 நண்பா ராகுல் நான் அழைத்தது உங்க இருவரின் பிரச்சனை கேட்க அல்ல, கமலேஸ் பற்றி ஏதாவது தெரியுமா

எனக்கு எந்த செய்தியும் தெரியாது! இங்கே இருக்கும் செய்தியே பார்க்க நேரமில்லை .

சரி அப்ப நான் தொடர்பை துண்டிக்கின்றேன் ஏதாவது தகவல்கிடைத்தால் சொல்லு ராகுல்.ஒரு நிமிஷம் யாழவன்  ஏன் கந்தன் ஸ்டோர் முதலாளியைவிட சாருமதியின் அப்பன் புதுப்பணக்காரன் ஆகிட்டான் போல?

. நல்ல மாப்பிள்ளையை கைக்குள் வைத்துக்கொள்ளாமல் வேற்று நாட்டவரை அவர் பெட்டை இவன் தான் என் கணவர் என்று கூட்டிக்கொண்டு வரும் போது எந்த முகத்தைக்கொண்டு. வரவேற்பார் ?

அதுசரி எல்லோரும். இப்ப  தகுதியில் உயர்ந்துவிட்டார்கள்  போல  பட்டதாரிகள் என்று இந்த வெளிநாட்டுக்கு வந்து !அப்படித்தானே?

 வெற்றிலை கூட வாடிப்போகக்கூடாது என்று அன்பில் தண்ணி தெளிப்பது  நம் குணம். ஏதோ போதை வஸ்த்து பாவிக்கின்றான் என்று அவனை வீதியில் போட்டுவிட எப்படி எல்லாருக்கும் இரக்கம் கெட்டுப்போச்சு ?புகையிலைக்கும் வாசம் இருக்கு, அதைத்தாங்கும் படங்கு  என்ற சாக்கு கூட புகைவாசம் இருக்கு! அப்படி  இல்லை  என்று சொல்லமுடியுமா உன்னால்?

 இதைப்பாரு ராகுல் உன் போல எனக்கு வெற்றிலைக்கடை அனுபவம் இல்லை இப்ப அவன் எங்க என்று தெரியுமா அது மட்டும் சொல்லு!


தொடரும்!

பெட்டை-மகள் யாழ் வட்டார மொழி!

படங்கு சாக்கு-நூல்ச்சாக்கு!

3 comments :

வலிப்போக்கன் said...

நானும் தேடுவதை......தொடருகிறேன்..

பூ விழி said...

கடைசியில் கடைசிவரை விவரம் தெரியவில்லை

Asokan Kuppusamy said...

தேடல் கதை நன்றாக உள்ளது