08 February 2018

அகந்தையை அழிப்பவனே.!

உலகு எங்கும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான  ஐய்யப்ப பக்தர்கள் இந்தியாவில் இருக்கும் சபரிமலை நோக்கி கார்த்திகை 1இல் மாலை அணிந்து மண்டல விரதம் /மகர விரதம் இருந்து குருசாமி தலைமையில் யாத்திரை செல்வது ஒரு வழமையான விடயம்  .

அவ்வாறே ஈழத்தின் பூர்வீகமாகக்கொண்டவர்களும் பிரெஞ்சு அரசின் அடைக்கல வாழ்வுரிமை பத்திரம் பெற்றவர்களும் இங்கே இருக்கும் சில குருசாமி தலைமையில் இந்தியாவுக்கு பாத யாத்திரை செல்வது தொடரும் ஒரு நிகழ்வு.

 அடியேனும் என் குருநாதர் தலைமையில் சில வருடங்கள் தொடர்ந்து சபரிமலை சாஸ்தாவின் அருள் நாடி பெருவழியூடாக பயணம் செய்து ஐய்யன் அருளினை பெற்றுவருகின்றேன்

இவ்வாண்டும் என் குருசாமி தலைமையில் இந்தியா செல்வதுக்கு மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கும் இடையில் நாம் பல நூறு சாமிமார்கள், மாளிகைப்புறங்கள் ,கொச்சிகள், மணிகண்டன்கள் எனப்பலர் பாரிசில் இருக்கும் இந்திய அரசின் அனுமதி பெற்ற விசா வழங்கும் நிறுவனத்தில்!
 http://www.vfsglobal.com/india/france/In_Paris.html

  எம் விசாக்கோரலுக்கான விண்ணப்படிவத்தில் பூரண விளக்கம் கொடுத்து ,சகல ஆவணங்களின்  அத்தாட்சி பிரதியுடன் விண்ணப்பித்து இருந்தோம்!

 விசா செண்டரில் பூரணப்படுத்திய ஆவணத்துடன் பிரெஞ்சு அரசு வழங்கிய போக்குவரத்து ஆவணம்(Thietre )விசாக்கட்டணம் (முன்னர்65- ஈரோ )இவ்வாண்டு 105 + மின்னஞ்சல்/குறுஞ்செய்தி அனுப்புக்கூலி என 107.30 ஈரோ செலுத்தியிருந்தோம்


காலமும் விரைந்து ஓட ஐய்யப்பன் நினைவில் மாலையில் இல்லறப்பூசைகளும், காலையில் ஆலயப்பூசைகளும் என ஐய்யப்ப விரதம் சிறப்பாக நகர்ந்து  சென்று ஒரு மண்டல விரதமும் நிறைவுற்ற நிலையில் !http://natarajar.blogspot.fr/

குருசாமி தலைமையில் இருமுடிகட்டி நெய்யபிசேஷம் இனிதே பாரிசில் பார்க்கும் சூழல் பலருக்கும் அமைந்து இருந்தது

இடையில் நத்தார் பண்டிகை/புதுவருட விடுமுறையில் வந்து சென்ற நிலையில் இந்தியா செல்வதுக்கு முன்கூட்டியே விமாப்பற்றுச்சீட்டும் பெற்று முழுத்தொகையும் கட்டியிருந்தோம்.

 எங்கள் குருசாமி தலைமையில் சென்னையில் தை (8/1/18) இருமுடிகட்டுவதற்கு தயாராக எண்ணி இருந்த நிலையில்! விசா வழங்கும் நிறுவனத்தில் இருந்து பதில் வரவில்லை .பிரெஞ்சுக்குடியுரிமை பெற்றவர்களுக்கும், இலங்கை கடவுச்சீட்டு வைத்து இருப்போருக்கும் விசாவழங்கிக்கொண்டு இருந்தார்கள்.

 பிரெஞ்சு சட்டத்திற்கு அமைய இலங்கை தவிர்த்து எந்த தேசம் செல்லக்கூடிய எங்களின் ஆவணத்துக்கு!


  உரிய காரணம் கூறாமல் விசா வழங்கும் நிறுவனம் காலம் தாழ்த்திக்கொண்டு இருந்து.

  ஜோதி தருசனம் காணலாம் என்ற நம்பிக்கை கூட அற்றுப்போன நிலையில் திவ்ய தருசனம் காணலாம் என் எண்ணி இருந்தோம் சிலர், தொடர்ந்து வந்த நாட்களில் இந்திய தூதுவர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி/கடிதம் கொடுத்து காத்து இருந்தும்.

 இந்திய அதிகாரபீடம் கருனையுள்ளம் கொண்ட பந்தளராஜன் முகம் காண வழிகாட்டவில்லை .இந்நிலையில் பல சாமிமார்கள் விரதபூர்த்தி செய்து புனித மாலையை இறக்கிக்கொண்டார்கள்.

 ஒரு சிலர் மாசி  மாத பூசைக்கு போய்விடலாம் என்ற ஒரு நற்பாசையில் ஹரிஹர சுதன் ஐய்யப்பனை எண்ணி தொடர்ந்தும் விரதம் கடைப்பிடித்தவர்களில் அடியேனும் ஒருவன்

எங்களின் வேதனை எல்லாம் ஏன் இந்திய அதிகாரபூடம் காரணம் கூறாது மூன்று மாதங்களுக்கு மேலாக எமது போக்குவரத்து ஆவணத்தை தேக்கிவைத்து? ஒழுங்கான அதிகாரசேவை மையம் ஏன் தனிநபர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் தரவில்லை ?ஒருவருக்கு விசாவை வழங்குவதன் இல்லையா என்பதை தீர்மானிக்க முடியாத ஒரு பொம்மை அதிகாரிகளா  இப்போது பாரிஸ் இந்திய தூதரகத்தில் கடமையில் இருப்பது ?

அல்லது ஒட்டு மொத்த பாரிஸ் அடைக்கலவாசி ஈழத்தமிழர்கள் தேசவிரோதிகள் என்றா ?சமூகவிரோதிகள் என்றா ?சிந்தனைகொண்டு இருக்கின்றார்கள்

அப்படி என்றால் நம்மில் யாரவது பாதயாத்திரையின் போது இந்திய தேசத்தில் செய்த ஏதாவது சமூகவிரோத செயல்/தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பது   பற்றி ஆதாரம் காட்ட முடியுமா

ஏன் உரிய காரணம் சொல்ல ஒருவரும் இன்றுவரை முன்வரவில்லை? அதிகாரிகளுக்கு மின்னஞ்சல்/இந்திய வெளியுறவு அதிகாரிகளுக்கு டிவிட்ஸ் என்று எந்த மார்க்கமும் மூடிய கதவாக இருப்பது ஏன்?

 இந்திய தேசத்துக்கு ஆன்மீகப்பயணம் நோக்கி பல தடவை போய் வந்த ஆதாரங்கள் அவர்களிடம் இருக்கும் நிலையில், ஏன் இவ்வாண்டு திட்டமிட்டு /நாசகார/ மனித நேயம் அற்ற இச்செயலைப்புரிந்தார்கள்?

 இது விடயமாக நாம் யாரிடம் முறையிடுவது ?ஈழத்தமிழருக்கு ஒரு நிலையான அதிகாரமீடம் இல்லை .

இந்து மதம் சார்ந்த துணிந்து, எழுந்து நின்று பேசக்கூடிய ஒரு அமைப்புக்கள் இதுவரை பாரிசில் இல்லாத நிலையில், இனிவரும் காலங்களில் நாம் எப்படி ஐய்யப்பன் யாதிரைக்கு துணிந்து பயணங்களை ஒழுங்கு செய்ய முடியும்? விரதங்கள் மீது விரக்தி வருமாயின் ஆயுள் முளுவதும் விரதமே கைக்கொள்ளமாட்டார்கள் பக்தர்கள்.


எத்தனை சாமிமார்கள் மணிகட்டும் ஆர்வத்தில் இருந்தார்கள், 18வது யாத்திரையின் அடையாளமாக சன்னிதானத்தில் தென்னங்கன்று நடக்காது இருந்தோரின் மன வேதனை எல்லாம் நிச்சயம் நாம் வணங்கும் சபரிமலையான்  பக்தர்களுக்கு துயர் தீர்ப்பான் எனில்

 எங்களின் ஜோதி தருசனம். காணாத மனக்குமுறலுக்கும்  கவலைக்கும்  காரணமான எதேச்சதிகார/பாசிசவாத /இரக்கமற்ற /தலைக்கனம் மிக்க அதிகாரிகளுக்கு  நிச்சயம் ஒரு தண்டனை வழங்க வேண்டும்

தர்மசாஸ்தா என்றும் ஏழைகளின் குரல்கேட்டு இறங்கி வந்து பாவ விமோஷனம் வழங்குவார்கள் என்பது பக்தர்களின் தூய நம்பிக்கை .

அந்த நம்மிக்கையை சீரழித்த அதிகார பீடத்தின் சந்ததிகளுக்கும் இந்த துயரத்தின் பாவச்சுமை போய்ச்சேரப்போகின்றது என்பதை அறியாத விசா வழங்கும் சேவை மையமும், இந்திய பாரிஸ் தூதரக அதிகார வர்க்கமும் நிச்சயம் ஒருநாள் காந்தமலை ஜோதிஸ்சொரூபவனுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்

இன்னல்கள் நீக்குபவனே சரணம் ஐய்யப்பா என்று நாம் போடும் கோஷங்கள் பொய்யல்ல, புலம்பெயர் தேசத்து பொருளாதார நெருக்கடி,மழை,குளிர் என்று எதையும் தாங்கியே சாமியே சரணம் என்று சரணாகதி அடையும் பக்தர்களின் தூய  உள்ளக்குமுறல் /பெருவழி யாத்திரை என்ற உன்னத விரத பூர்த்தியை சீர்குழைத்தவர்களுக்கு என்றாவது ஒரு பொழுதில் நித்திய ஜோதிவடிவான ஐய்யப்பன் நியாய தீர்ப்பு  வழங்குவான்.

இதிகாசகங்களிலும் , இந்துமத ஆய்வாளர்களின் கூற்றுப்படியும் பரசுராம முனிவர் பிரதிஸ்ட்டை செய்த ஐய்யப்பன் திருவுருவம் இந்தியாவில் இல்லாது அமெரிக்காவிலோ?கனடாவிலுலோ ?ஆப்பிரிக்க தேசங்களிலோ?அவுஸிஸ்ரேலியாவிலோ ?வீற்று இருக்கும்  எனில் அந்த அந்த தேச தூதுவர் ஆலயங்களில் ஒருவாரம் முதல் மூன்று வாரத்தில் விசா பெற்று சென்றுவிடுவோம் நாம் என்பதை ஊழலில் மிதக்கும் அந்த அதிகாரபீடம் இனியாவது   சிந்திக்கட்டும்.


 இவ்வாறான நிகழ்வு இனியும் இடம்பெறலாம் என்பதுக்கான முன்னெச்சரிக்கை இது போலும்!

இனி உங்களின் விசா தேவையில்லை என்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து 48 மணித்தியாளத்தில் அடியேன் எனது ஆவணத்தை மீட்ககாத்து இருக்கின்றேன்.

இவ்வாரம் பாரிசில் அதிக பனிமழை என்பதால் நடைமுறை வாழ்வியல் பாதிக்கப்பட்டு இருக்கின்றது வரும் வாரம் ஆவணம் வந்திடும்

தனிமரம் போல சிலர்  இழந்தவை விசாக்கட்டணமும், விமானக்கட்டணமும்(காப்புறுதி செய்யவில்லை !கழிவு விலையில் பெற்றுக்கொண்டது டிக்கட் .விலைக்கழிவு பார்த்தன் பின்விளைவை எண்ணவில்லை.) 

பணம் தொலைந்தால் உழைத்துக்கொள்ளமுடியும் என்றாலும் ஏற்பட்ட மன உலைச்சலுக்கு யார் பதில் கூறுவார்கள்?

 இந்துமதத்தின்  பூர்வதேசம் என்று பிலாவிடும் வரலாற்று ஆசிரியர்கள்? இனி வரும் காலங்களில் திருத்திக்கொள்ளட்டும் இருக்கும் தேசங்களில் ஆன்மீகத்தை கடைப்பிடியுங்கள் யாத்திரை என்று மதியாதார் தேசங்களுக்கு மலையேறச்சொல்லாதீங்கள் என்று!

அப்போதாவது அராஜக அதிகாரபீடம் திருந்துவதற்கு வழிகிட்டும்

ஆணவத்தை அழித்த  உத்தரத்தில் உதிர்த்தவன் புகழ் சில புல்லுருவிகளின் தணிக்கைப் பார்வையாள் என்றும் விலகாது!

இந்தப்பதிவு எழுதி ஆவது ஒன்றும்மில்லை என்றாலும் ,இப்படி நடந்ததுநடக்கின்றது என்ற ஒரு தகவல் நேர்மைமிக்க அதிகாரிகளின் பார்வைக்கு சென்று சேரட்டும் என்ற ஆதங்கம் அன்றி வேறில்லை. பாதிக்கப்பட்டவர்கள் பலரில் அடியேனும் ஒருவன் நடைமுறைச்சாட்சியாக!

இந்திய குடியரவு/குடியகல்வு  நிர்வாகம்  ஆம் /இல்லை என்று பதில்  கொடுத்து இருக்கலாம் விரைந்து! அல்லது விசா நிராகரிப்பு என்றாவது ஒரு காரணத்தை உடனடியாக சொல்லி இருக்கலாமே? ஏன் இந்த கபட நாடகம்?


சாமியே சரணம் ஐய்யப்பா 
 உன் திருவடியே சரணம் ஐய்யப்பா!

12 comments :

KILLERGEE Devakottai said...

இந்திய தூதரகத்தின் செயல் உலகம் முழுவதுமே இப்படித்தானா ?

Thulasidharan V Thillaiakathu said...

நேசன் கில்லர்ஜியின் பதிலைப் பார்க்கும் போது இப்படித்தான் எங்கும் நடக்குதோ என்றே தோன்றுகிறது...மிகவும் வேதனையான விடயம் நேசன். தங்களிக்கு பண இழப்பப்பு மன உளைச்சல் என்று...

நிச்சயம் நலல்து நடக்கும் நேசன். மனம் கலங்காமல் உங்கள் பிரார்த்தனையை எப்போதும் தொடருங்கள் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே!! எங்களின் பிரார்த்தனைகளும்...

தனிமரம் said...

என்ன நடைமுறையோ ஜி! நன்றி வருகைக்கும்,
கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி வருகைக்கும்,
கருத்துரைக்கும் துளசி அண்ணாச்சி!

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை நண்பரே
நல்லதே நடக்கும்
கவலை வேண்டாம்

வலிப்போக்கன் said...

ஐயப்பனே அருள் பாவிக்காதபோது..பாரீசில் ஒரு ஐயப்பனை நிறுவி விட்டால் போகிறது...

தனிமரம் said...

நன்றி கரந்தை ஐயா வருகைக்கும், கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஐயப்பனே அருள் பாவிக்காதபோது..பாரீசில் ஒரு ஐயப்பனை நிறுவி விட்டால் போகிறது////பாரிஸில் 5 ஐயப்ப ஆலயம் இருக்கு நண்பரே ஆனாலும் மூலம் ஒன்று மட்டுமே இவ்வுலகில் .நன்றி வருகைக்கும், கருத்துரைக்கும்.

athiraமியாவ் said...

நேசன் இப்போதுதான் பார்க்கிறேன் உங்கள் குமுறல் புரிகிறது.... எல்லாம் நன்மைக்கே என நினையுங்கள். சிலநேரம் உங்களைக் காப்பாற்றுவதற்காகவே ஐயப்பன் சுவாமி இப்படி பண்ணியிருக்கலாம்.... பணச்செலவைவிட மன உளைச்சல் பெரியதுதான், இருப்பினும் ஒரு தடை வந்திட்டால் அது நன்மைக்கே என எடுத்துக் கொண்டு அமைதியாகிடுங்கோ தொடர்ந்து முயற்சிக்க வேண்டால் அடுத்த வருடம் போகலாம்.

athiraமியாவ் said...

இந்தியாவுக்கு மட்டும் ஏன் விசாக் கேட்கிறார்களோ தெரியவில்லை... எந்த பாஸ்போர்ட்டாயினும் இந்தியாவுக்கு மட்டும் விசா எடுக்க வேண்டும் கர்ர்ர்ர்ர்ர்ர்:)

வலிப்போக்கன் said...

கடவுள் தூணிலும் துரும்பிலும் இருப்பவர் அல்லவா.... சொல்லக்கேள்வி்..

Angel said...

மன வருத்தமாயிருக்கு நேசன் .நீங்க இந்தியாவில் இருக்கீங்க போயிட்டு வந்திட்டீங்கன்னுதான் இத்தனை நாளும் நினைச்சிட்டிருந்தேன்.

// விரதங்கள் மீது விரக்திவருமாயின் ஆயுள் முளுவதும் விரதமேகைக்கொள்ளமாட்டார்கள் பக்தர்கள்.//
இல்லை அப்படி விரக்தி வரவிடக்கூடாதது .நிச்சயம் விரைவில் நல்லது நடக்கும்னு நம்புங்க .இது குழுவாக பிரயாணம் என்ற காரணமா ?
ஆனால் ஒரு உண்மையை இங்கே கூறியாகணும் இந்திய எம்பஸ்ஸி எல்லா இடத்திலும் இப்படித்தான்.நிறைய பேர் கம்ப்ளெயிண்ட் செய்திட்டங்க ஆனாலும் அவர்கள் திருந்துவது போலில்லை .ஒரு கேரளப்பெண்மணி பிறந்து 20 நாளான குழந்தையை தூக்கிக்கொண்டு வெல்ஸிலிருந்து 3 மணிநேரம் டிராவல் பண்ணி எம்பசி வந்தார் அவரிடம் பாஸ்போர்ட் விஷயமா மீண்டும் வாங்கன்னு அதிகாரி சொல்ல அப்பெண்மணி தாங்கமுடியாம உரக்க கத்திவிட்டார் .இந்திய எம்பசி அதிகாரிகளுக்கு விசா பாஸ்போர்ட் போன்ற அலுவலக விஷயங்கள் எதையும் ஒழுங்காக செய்ய தெரியவில்லை என்பது தான உண்மை . இவ்வளவு ஏன் PIO கார்ட் எடுக்க எனக்கு தேவையான நாளில் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கமாட்டேன்கிறாரகள் :(
.