21 March 2018

வசந்தம் வருமா?

வலையுலகம் இப்போதெல்லாம் ஏனோ ?அதிக அமைதிகாக்கின்றது . இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் இணைத்தொழில்நுட்ப தடங்கங்கள்  ஒரு புறம் என்றால்!

 மறுப்புறத்தே இலங்கையின் இணையத்தணிக்கை சுழல் இம்மாதத்தின் 

முதல் வாரங்கள் போல அல்லாமல் கொஞ்சம் இப்போது மாறி வருகின்ற நிலையில், இனி வரும் காலத்தில் ஈழப்பதிவர்கள் அதிகம் வருவார்கள் என நம்பிக்கைகொள்வோம்))) 

பல பதிவர்களை  அறிமுகம் செய்து வைத்து பின்னர் அவர்களின் வளர்ச்சியில் போட்டியையும் பொறாமைகளும் கில்லர்ஜீ சொன்னது போல , ஐநாவின் நாட்டாமை பதவி ஆசையில் உள்குத்து, ஊமைக்குத்து ,மைனஸ் ஓட்டு என்றெல்லாம் கலகலப்பூட்டுய தமிழ்மணம் திரட்டியின் இப்போதைய நிலைய சிஸ்ரம் தவற்றை நீக்க  எந்த தொழில்நுட்பப்பதிவர் வந்து புதுப்பொழிவு ஊட்டுவாரோ ?என பதிவுலகம் காத்து இருப்பதும் மறுப்பதற்கு இல்லை

தமிழ்மணம் திரட்டியில் என் தளத்தை மீள இணைக்கக்கூறி எழுதிய மெயில்களின் 

கடிதங்கள் எல்லாம் இலங்கை ஜனாதிபதிக்கு

 கொடுத்த காணமல் போனோர் 

மனுப்போலத்தான் 

இன்னும் பதில் இல்லாத கைவிரிப்பு போல தேங்கியே கிடக்கின்றது . விரைவில் இந்தபதிவுலகம் முன்னர் போல கலகலப்புடன் சட்டையைக்கிழித்து செத்துச்செத்து விளையாடுவது போல இயங்க வேண்டும் என்ற ஆசை இன்னும் இருக்கு


முகநூலில் என்னதான் எழுதினாலும் இந்த வலையுலகில் எழுதும் ஆனந்தம் /சந்தோஷம்  போல மகிழ்ச்சி  நிறையப்பேருக்கு இருக்கும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்காது. எது எப்படியோ புது திரட்டிகள் வரும் என்ற திண்டுக்கல் தனபாலன் சாரின் அறிவிப்பு வந்து ஒரு வருடங்கள் நெருங்கும் நிலையில் புதிய திரட்டிகள் எதாவது வந்து பதிவுலகை மையம் கொள்ளாதா என்ற ஏக்கமும் இன்னும் இருக்கின்றது இந்த தனிமரம் வலைக்கும்.  

மீண்டும் ஒரு புதிய தொடரின் அறிமுகத்துடன்  தனிமரம் அடுத்த பதிவை உங்களிடம் கொண்டுவர இருக்கின்றேன்!

----------------------------------------


இந்தக்கவிதை இணைய வானொலி புரட்சியில் வந்தது வலையில் சேமிப்பாக !))

சில்லென்ற பனித்துளி பட்டு
சிந்திய மரக்கொடியின் ஆனந்தம் போல
சிரிப்பு என்றாலே நீயல்லவா!
சித்தம் எல்லாம் 
சிகிலம் அடைந்த இதயத்தின்
சிருங்காரப்பூவை 
சிறைப்பறவை போல 
சீர்கெட வைத்தவளே!
சிந்திக்கின்றேன் .!
சின்னவன் நானும்
சீரகத்தண்ணியில் சிலகலவை 
சிட்டுபோல கலந்து
சிந்தமாமல் சிதறாமல் நாயகன் போல
சிறுகோடு இட்டு
சினேஹா போல 
சித்திரம் தீட்டிய 
சீர்கெட்ட சமுகத்தை
சீர்தூக்கிவிட 
சீக்கிரம் வரும் பங்குனி உத்தரம் 
சிலை போல வருவாயோ ?
சின்னமணிக்குயிலே உன் முகம் நோக்கி
சீக்கிரம் வரும் பாடலின் பின்னே!
சிலருக்கு தவிப்பு  ,சிலருக்கு
சிந்திக்க சிறையில் இருப்போர் நிலை
சிங்கப்பூர் தொழில் அதிபர் போல
சில்லறை அரசியல் அல்ல
சிறிலங்கா அதிபரும்
சிவந்த மண்ணில் சிலை போல!
சித்திரக்கலையில்
சிக்காத சிட்டாக!

(யாவும் கற்பனை)
9 comments :

Avargal Unmaigal said...

திரட்டிகளை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து எழுதி வாருங்கள் படிப்பவர்கள் நிச்சயம் பல வழிகளில் வருவார்கள்

KILLERGEE Devakottai said...

நமது எழுத்து பிடித்தால் வருவார்கள் நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

திட்டிகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்
தொடர்ந்து எழுதுங்கள்
தங்களின் அடுத்தத் தொடருக்காகக் காத்திருக்கிறேன்

putthan said...

இந்த ஏக்கம் என்க்கும் உண்டு ....முகப்புத்தகத்தில் எல்லா விடுப்பையும் அறிந்து கொள்வதால் பலருக்கு வலியுலகம் தேவைப்படுவ்தில்லை என நினைக்கின்றேன்

athira said...

2011,2012 ஆண்டுகளில் கணிப்பீட்டில் பதிவெழுதும் பெண்களில் அதிகமானோர் இலங்கைப் பெண்கள் என இருந்தது... இப்போ எல்லோரும் செவ்வச்ய்க்கிரகத்துக்கு:) மூவ் பண்ணி விட்டார்கள்:)... லைக் மட்டும் போடுவது அங்கு ஈசியெல்லோ...

athira said...

தமிழ்மணம் இருந்தாலும் அதனூடாக ஆரும் வந்து நம்மை ஊக்குவிக்கப் போறதில்லை:) அதேபோல அது இல்லை என நம்மிடம் வருவோர் ஆரும் வராமல் விடுவதுமில்லை:)...
இருந்தால் சந்தோசம்... இல்லை எனில்
அதைவிடச் சந்தோசம் என எண்ணிடுவோம் ஹா ஹா ஹா...

athira said...

ஒரு எழுத்தை வைத்து அடிக்கடி அழகழகா கவி வடிக்கிறீங்க நேசன் வாழ்த்துக்கள்:)...

சினேகாவோடு கோபமோ?:)..

திண்டுக்கல் தனபாலன் said...

மீண்டும் ஒரு பொற்காலம் பிறக்கும்...

Thulasidharan V Thillaiakathu said...

சிந்தமாமல் சிதறாமல் நாயகன் போல
சிறுகோடு இட்டு
சினேஹா போல
சித்திரம் தீட்டிய //

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா..அது சரி அதற்கு அடுத்த வரிகள் எல்லாம் ஏன் ஏன் ஏன் ஸ்னேகா உங்களைக் கண்டு கொள்ளவில்லையா..ஹா ஹா ஹா

உங்கள் தொடருக்குக் காத்திருக்கிறோம் நேசன்...திரட்டிகள் இல்லை என்றால் என்ன. அதைப் பற்றிக் எல்லாம் சிந்திக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்...!!

கீதா